பாஸ்போர்ட்டில் பெயர் இப்படி இருந்தால் UAE-ல் நுழைய அனுமதி கிடைக்காது
UAE: பாஸ்போர்ட்டில் உள்ள பெயரில் ஏதேனும் தவறு இருந்தால், பயணிகள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டிய அனைவருக்கும் பாஸ்போர்ட் ஒரு முக்கிய ஆவணமாகும். இருப்பினும், சில நேரங்களில் நாம் இதில் முழுமையாக கவனம் செலுத்தாவிட்டால், பாஸ்போர்ட்டில் உள்ள ஒரு சிறிய தவறும் பல பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். மாறாக, பாஸ்போர்ட்டில் உள்ள பெயரில் ஏதேனும் தவறு இருந்தால், பயணிகள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகையால், பாஸ்போர்டில் உள்ள தகவல்களுக்கு அனைவரும் அதிகப்படியான முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்.
இப்போது ஐக்கிய அரபு அமீரகம் (UAE) பாஸ்போர்ட் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது இந்தியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவலாகும். பாஸ்போர்ட் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்துள்ள வழிகாட்டுதல்கள் இந்தியர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன.
நுழைவு மறுக்கப்படலாம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி, இந்திய பாஸ்போர்ட்டில் முழுப்பெயர் இல்லாமல் பயணிகள் அமீரகத்தில் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு இந்திய குடிமகன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்ல வேண்டும் என்றால், அவருடைய பாஸ்போர்ட்டில் அவரது முழு பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா மற்றும் ஏஐ எக்ஸ்பிரஸ் ஆகியவை கூட்டாக சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளன.
மேலும் படிக்க | லண்டனில் பாஜக ஆதரவுப் பேரணி நடத்தும் வெளிநாடுவாழ் குஜராத்திகள்
முழு பெயர் இருக்க வேண்டும்
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்ல, ஒரு பெயர் மட்டுமே கொண்ட பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர் ஒரே பெயர் (எழுத்து) அல்லது குடும்பப்பெயர் மட்டும் கொண்டிருந்தால், அது ஏற்றுக்கொள்ளப்படாது. அந்த பயணி INAD ஆக கருதப்படுவார்" என்று ஏர் இந்தியா இணையதளத்தில் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
INAD
ஏர் இந்தியாவின் சுற்றறிக்கையில், ஒரே வார்த்தை கொண்ட பெயரைக் கொண்ட பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா வழங்கப்படாது என்றும், முன்பு விசா வழங்கப்பட்டிருந்தால், அது குடியேற்றம் மூலம் INAD ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. INAD என்பது 'ஏற்றுக்கொள்ள முடியாத பயணி' என்பதைக் குறிக்கிறது. INAD என்பது பயணிகள் விரும்பும் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நபர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு விமானச் சொல்லாகும்.
விதிகள் யாருக்கு பொருந்தும்
ஐஎன்ஏடி என அடையாளம் காணப்பட்ட பயணிகள் விமான நிறுவனம் மூலம் தங்கள் நாட்டுக்கு அழைத்து செல்லப்படுவதாக சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய விதி விசிட் விசா/விசா ஆன் அரைவல்/வேலைவாய்ப்பு மற்றும் தற்காலிக விசாக்கள் உள்ள பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் தற்போதுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமை அட்டை வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது.
மேலும் படிக்க | போலி வேலைவாய்ப்பு மோசடியில் மியான்மியரில் சிக்கிய 200 தொழிலாளர்கள் மீட்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ