வெளிநாட்டுப் பயணமா? பாஸ்போர்ட்டே காமிக்காத! பிரிட்டிஷ் ஏர்வேஸின் தொழில்நுட்ப முயற்சி

British Airways Biometric Technology: சர்வதேச விமானங்களுக்கு பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைச் சோதனை செய்த முதல் இங்கிலாந்து விமான நிறுவனமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் மாறியிருக்கிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 16, 2022, 06:59 PM IST
  • சர்வதேச விமானங்களில் பயோமெட்ரிக் தொழில்நுட்பம்
  • சோதனை அடிப்படையில் அமல்படுத்திய பிரிட்டிஷ் ஏர்வேஸ்
  • பயோமெட்ரிக் தொழில்நுட்பச் சோதனையில் இங்கிலாந்து விமான நிறுவனம்

Trending Photos

வெளிநாட்டுப் பயணமா? பாஸ்போர்ட்டே காமிக்காத! பிரிட்டிஷ் ஏர்வேஸின் தொழில்நுட்ப முயற்சி title=

லண்டன்: சர்வதேச விமானங்களுக்கு பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைச் சோதனை செய்த முதல் இங்கிலாந்து விமான நிறுவனமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் மாறியிருக்கிறது. இந்தச் சோதனையில் பங்கேற்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் பாஸ்போர்ட்டைக் காட்டாமல் விமான நிலையம் வழியாகப் பயணிக்கலாம். லண்டன் ஹீத்ரோ டெர்மினல் 5ல் இருந்து விமானச் சேவையின் சோதனையில் பங்கேற்க பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், பயணத்திற்கு முன் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் தங்கள் முகம், பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ் ஆகியவற்றை ஸ்கேன் செய்ய அழைக்கப்படுவார்கள், இந்தத் தகவல் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைக்கப்படும்.

பயோமெட்ரிக் தொழில்நுட்பச் சோதனை பங்கேற்பாளர்கள் விமான நிலையத்திற்கு வரும்போது, ​​ஸ்மார்ட் பயோ-பாட் கேமராக்கள் மூலம் அவர்களின் அடையாளம் சரிபார்க்கப்படும். அடையாளம் சரிபார்க்கப்படுவது மூன்று வினாடிகளுக்குள் நடந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | போலந்து ஏவுகணை தாக்குதல்: ரஷ்யாவை சாடிய ஜெலன்ஸ்கியின் வாயை அடைத்த அமெரிக்கா

இந்த முறையின்படி, சர்வதேச விமானப் பயணிகள் தங்களுடைய பயொமெட்ரிக் தகவல்களை வீட்டிலேயே பதிவு செய்துக் கொள்ளலாம். இதனால், கடவுச்சீட்டை சரிபார்க்கும் நடைமுறை மிகவும் எளிதாகவும் துரிதமாகவும் நடைபெற்றுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் பயோமெட்ரிக் தகவல்களை வீட்டிலேயே பதிவு செய்வது இதுவே முதல் முறை. அதோடு, பிரிட்டிஷ் ஏர்வேஸின் சர்வதேச விமானங்களுக்கு அவர்கள் அதைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை. இது ஒரு பாதுகாப்பான மற்றும் திறமையான கருவியாகும், இது சிறந்த மற்றும் சுமூகமான விமான நிலைய அனுபவத்தை உருவாக்குகிறது, இது பயணிகள் எதிர்கொள்ளும் வழக்கமான நடைமுறை சிரமங்களையும் நேர விரயத்தையும் குறைக்கும்” என்று பிரிட்டிஷ் ஏர்வேஸின் செயல்பாட்டு மாற்ற மேலாளர் டேவிட் ப்ரீஸ் கூறினார்:

மேலும் படிக்க | Corona 4th Wave: குளிர்காலத்தில் கோவிட் அதிகரிக்கும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஸ்பெயினின் மலாகாவுக்குச் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் இந்த சோதனை ஆறு மாதங்களுக்கு அமல்படுத்த்ப்படும். பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தின் மூலம் கடவுச்சீட்டை காண்பிக்கும் முறையை தேர்வுசெய்யும் வாடிக்கையாளர்கள், ஃபாஸ்ட்-ட்ராக் பாதுகாப்புப் பாதையைப் பயன்படுத்த அழைக்கப்படுவார்கள் மற்றும் அவர்களுக்கு போர்டிங்கில் முன்னுரிமையும் கொடுக்கப்படும்.  

சோதனை வெற்றியடைந்தால், இந்த தொழில்நுட்பம் மேலும் பல சர்வதேச விமானங்களுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஏர்வேஸின் உள்நாட்டு விமானங்களில் தானியங்கி பயோமெட்ரிக் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய ஐக்கிய ராஜ்ஜியத்தின் முதல் விமான நிறுவனம் என்ற பெருமையை தற்போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் பெற்றுள்ளது. செக்யூரிட்டி செக்கிங் பகுதியில் பதிவாகும் பயணிகளின் முக ஸ்கேன்களைப் பயன்படுத்தி, போர்டிங் கேட்டில் சரிபார்க்கும் பணி செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | உலக தமிழ் வம்சாவளி மாநாடு: 2023 ஜனவரி 6 & 7 தேதிகளில் சென்னையில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News