UAE: இந்தியர்கள் அமீரகத்தில் ஆன் அரைவல் விசாவை பெற முடியுமா?
UAE: அதிக அளவில் இந்தியர்கள் வேலைக்கு செல்லும் இடங்களில் ஒன்றாக அமீரகம் உள்ளது. ஆகையால், அமீரகத்துக்கான விசா விதிமுறைகள் பற்றி தெரிந்துகொள்வது மிக முக்கியமாகும்.
ஐக்கிய அரபு அமீரகம், அதிக அளவில் இந்தியர்கள் வேலைக்கு செல்லும் இடங்களில் ஒரு முக்கிய இடமாக உள்ளது. ஆகையால், அமீரகத்துக்கான விசா விதிமுறைகள் பற்றி தெரிந்துகொள்வது மிக முக்கியமாகும். வளைகுடா நாடுகளின் குடிமக்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நுழைவதற்கு விசா தேவையில்லை. அதே நேரத்தில் 70 க்கும் மேற்பட்ட நாட்டினர் இங்கு வந்த பிறகு விசாவை பெறலாம் (ஆன் அரைவல் விசா).
மற்ற அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்வதற்கு முன், பயணத்திற்கு முந்தைய விசாவைப் பெற வேண்டும் (ப்ரீ-டிராவல் விசா). எனினும், சாதாரண பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் இந்திய குடிமக்கள் பின்வரும் வசதிகளை பெற்றிருந்தால் அவர்கள் அமீரகத்துக்கு சென்றவுடன் ஆன் அரைவல் விசாவைப் பெறலாம்:
- அமெரிக்காவால் வழங்கப்பட்ட விசிட் விசா அல்லது
- அமெரிக்காவால் வழங்கப்பட்ட கிரீன் கார்ட் அல்லது
- யுகே வழங்கிய வதிவிட விசா அல்லது
- ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் குடியிருப்பு விசா.
மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவின் சிறந்த மாணவர்கள் விருது பெற்ற இந்திய மாணவிகள்
வேலிடிடி
இந்த முறையில் பெறப்பட்ட விசா அதிகபட்சமாக 14 நாட்கள் தங்குவதற்கு செல்லுபடியாகும். மேலும் 14 நாட்களுக்கு தாங்கள் அங்கு தங்குவதை நீட்டிக்க, இந்த விசா வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
விசாக்கள் அல்லது கிரீன் கார்டு, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த நாளிலிருந்து குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைந்த நாளிலிருந்து குறைந்தது ஆறு மாதங்களுக்கு பாஸ்போர்ட் செல்லுபடியாகும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
தொகை
எமிரேட்ஸ் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, 14 நாள் விசாவிற்கு 120 Dh10 செலவாகும்.
விசா வைத்திருப்பவர் கூடுதலாக 14 நாட்களுக்கு அதை நீட்டிக்க விரும்பினால், அதற்கு 250 திர்ஹம் செலவாகும்.
(குறிப்பு: இந்த இரண்டு விகிதங்களும் மாற்றத்திற்கு உட்பட்டவை.)
பிற விசா விருப்பங்கள்
28 நாட்களுக்கு மேல் நாட்டில் தங்க விரும்பும் இந்தியர்கள் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் மற்ற வகை விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், அவர்கள் புதிய பல நுழைவு, ஐந்து வருட சுற்றுலா விசாவை தேர்வு செய்யலாம். இந்த விசா வைத்திருப்பவர்கள் தொடர்ந்து 90 நாட்கள் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க முடியும், மேலும் இதே கால அளவுக்கு இதை நீட்டிக்கலாம். நீங்கள் தங்கும் கால அளவு ஒரு வருடத்தில் 180 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த விசாவிற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன் ஆறு மாத காலப்பகுதியில் $4,000 அல்லது அதற்கு இணையான வெளிநாட்டு நாணயங்களில் வங்கி இருப்புக்கான ஆதாரம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | NRI டாக்டர் விவேக் மூர்த்திக்கு அமெரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய மரியாதை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ