UAE: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு; உம் அல் குவைனில் புதிய வேக கண்காணிப்பு ரேடார்கள்
வாகன ஓட்டிகளின் அதிவேக விதிமீறல்களை குறைக்க உம் அல் குவைனில் ( Umm Al Quwain - UAQ) உள்ள கிங் பைசல் தெருவில் காவல்துறை புதிய வேக ரேடார்களை நிறுவியுள்ளது.
வாகன ஓட்டிகளின் அதிவேக விதிமீறல்களை குறைக்க உம் அல் குவைனில் ( Umm Al Quwain - UAQ) உள்ள கிங் பைசல் தெருவில் காவல்துறை புதிய வேக ரேடார்களை நிறுவியுள்ளது.
அபுதாபியில் காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து துறை, உம் அல் குவைனில் உள்ள கிங் பைசல் தெருவில், அபுதாபி இஸ்லாமிய வங்கிக்கு எதிரே புதிய வேக கண்காணிப்பு ரேடார்களை நிறுவியுள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான ஒரு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக காவல் துறை கூறியுள்ளது.
உம் அல் குவைன் (UAQ) காவல் துறையுன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாதசாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், விபத்துகளைக் குறைக்க இந்த ரேடார்கள் உதவும் என்றார். வாகனங்களின் வேக வரம்பைக் கண்காணிக்க நிறுவப்பட்டுள்ள இந்த ரேடார்கள் வாகன சாலை பாதுப்பை உறுதிபடுத்தும் வகையிலான முக்கிய நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அபுதாபி வாழ் தமிழர்களே அலர்ட்: இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கூட்டாட்சி போக்குவரத்து சட்டத்தின்படி, 80 கிமீ / மணி வேக வரம்பை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 3,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும், 23 கருப்பு புள்ளிகள் மற்றும் 60 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அபுதாபி காவல்துறை அதி வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கி உள்ளது.
வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் இயக்குவதால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோடு மட்டுமின்றி பிற பயணிகளுக்கும் பாதசாரிகளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது எனவே வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதைத் தவிர்த்து சாலை பாதுகாப்பை உறுதி செய்யுமாறு காவல்துறை கூறியுள்ளது.
மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR