வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு

Monkeypox Alert: சில குறிப்பிட்ட அறிகுறிகளை மக்கள் வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் மட்டுமே மாதிரிகளை என்ஐவி, புனேவிற்கு அனுப்பப்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 21, 2022, 02:02 PM IST
  • இந்தியாவில் மங்கிபாக்ஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
  • இந்தியா வரும் பயணிகளுக்கு சோதனை.
  • மத்திய அரசு நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு title=

வெளிநாடுகளில் மங்கிபாக்ஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து, மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனைத்து சர்வதேச நுழைவுப் புள்ளிகளான விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் தரை எல்லைக் கடக்கும் இடங்களில் கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது. 

ஆப்பிரிக்காவில் இருந்து வரும் மங்கிபாக்ஸ் அறிகுறிகள் உள்ள பயணிகளின் மாதிரிகள், மேலதிக விசாரணைக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (NIV) அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிறுவனமான ஏஎன்ஐ, "சில குறிப்பிட்ட அறிகுறிகளை மக்கள் வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் மட்டுமே மாதிரிகளை என்ஐவி, புனேவிற்கு அனுப்பப்படும். நோய்வாய்ப்பட்ட அனைத்து பயணிகளின் மாதிரிகளும் அனுப்பப்படாது" என்று ஒரு அதிகாரி கூறியதாக தெரிவித்துள்ளது. 

ஏஎன்ஐ உள்ளீடுகளின்படி, ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் வெளிவரும் புதிய சுகாதார நெருக்கடியை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆகியவற்றை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும் படிக்க | Monkeypox: அதிகரிக்கும் குரங்குக் காய்ச்சல்: அவசரக் கூட்டத்தைக் கூட்டும் WHO 

இதற்கிடையில், ஐரோப்பாவில் 100 க்கும் மேற்பட்டோருக்கு மங்கிபாக்ஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அல்லது இந்த தொற்று இருப்பதற்கான சந்தேகம் உள்ளது. இந்த திடீர் தொற்று பரவலைப் பற்றி விவாதிக்க உலக சுகாதார அமைப்பு (WHO) அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது. 

இது ஐரோப்பாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொற்று பரவல் என ஜெர்மனி இதை விவரித்துள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவைத் தவிர யுனைடெட் கிங்டம், ஸ்பெயின் போர்ச்சுகல், ஜெர்மனி மற்றும் இத்தாலி என குறைந்தபட்சம் ஐந்து நாடுகளில் மக்கள் மங்கிபாக்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குரங்குகளில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் நோய் பொதுவாக நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது. இந்த தொற்று இதுவரை ஆப்பிரிக்காவிற்கு வெளியே அரிதாகவே பரவியுள்ளது. தற்போது இந்த தொற்று பல நாடுகளுக்கு பரவியுள்ளதால், இது உலக அளவில் கவலை அளிக்கும் விஷயமாக மாறி வருகிறது.

மேலும் படிக்க | Monkeypox: அறிகுறிகள் இவைதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News