அதிர்ஷ்டம் இருந்தால் கூரையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும் என்று சொல்வதுண்டு. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மூவரது வாழ்வில் அது உண்மையாகியுள்ளது. அமீரகத்தில் வசிக்கும் மூன்று இந்தியர்கள் எமிரேட்ஸ் டிராவின் சமீபத்திய சுற்றில் தலா 77,777 திர்ஹம் (ரூ. 16,88,709) கிராண்ட் பரிசை வென்றனர். எமிரேட்ஸ் டிராவில் வென்ற வரிசையின் ஏழு இலக்கங்களில் ஐந்து இலக்கங்கள் பொருந்தி இருந்த ஏழு வெற்றியாளர்களில் இந்தியாவை தாய்நாடாகக் கொண்ட ஸ்ரீஜித் கொச்சுபுதடத்து சுரேந்திரன் நாயர், ராஜேந்தர் புர்ரா மற்றும் கெல்வின் சன்னி ஆகியோர் அடங்குவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

28 வயதான ராஜேந்தர் புர்ரா, துபாயில் கணக்கு எழுத்தராக பணிபுரிகிறார். "நான் எனது வெற்றியில் கிடைத்த பணத்தைக் கொண்டு எனது குடும்பத்திற்கு ஒரு வீட்டைக் கட்டப் போகிறேன். வீடு கட்ட வேண்டும் என்பது நான் சில காலமாக கண்டு வந்த கனவாகும். இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு எமிரேட்ஸ் டிராவுக்கு நன்றி” என்று புர்ரா கல்ஃப் நியூஸிடம் கூறினார்.


28 வயதான கெல்வின் சன்னி முதல் முறையாக பங்கேற்று டிராவில் வெற்றி பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைந்தார். சிவில் இன்ஜினியராகப் பணிபுரியும் 40 வயதான ஸ்ரீஜித் கொச்சுபுதடத்து சுரேந்திரன் நாயர், தான் எமிரேட்ஸ் டிராவில் வெற்றி பெற்றதைக் கண்டு வியப்படைவதாக தெரிவித்தார். இந்த வெற்றித்தொகையை தனது எட்டு வயது மகனின் கல்விக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


மேலும் படிக்க | துபாய்: நீட் 2022 தேர்வு பற்றிய முக்கிய தகவல்கள், மாணவர்களின் கவனத்திற்கு  


எமிரேட்ஸ் டிராக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்படுகின்றன. யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் இது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் பங்குபெறுபவர்களில் ஏழு அதிர்ஷ்டசாலிகளுக்கு தலா 77,777 திர்ஹாம்கள் பரிசாக கிடைக்கிறது. 


இந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய பரிசுத்தொகையான 100 மில்லியன் திர்ஹாம் கிராண்ட் பரிசு, வலமிருந்து இடமாக ஏழு எண்களுடன் பொருந்தக்கூடிய ஒரு நபர் அல்லது நபர்களின் குழுவால் பெறப்படும். அடுத்த குலுக்கல் ஜூலை 17 ஞாயிறு அன்று ஐக்கிய அரபு அமீரக நேரப்படி இரவு 9 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும். வாராந்திர டிராவில் பங்கேற்க, பவளப் பாலிப் செடியை நடவு செய்ய 50 Dh பென்சில் வாங்க வேண்டும்.


மேலும் படிக்க | UAE Jobs: துபாய், அபுதாபியில் Apple நிறுவனத்தில் பணியாற்ற மிகச்சிறந்த வாய்ப்பு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ