UAE: செவிலியர் உரிமம் பெற இனி இரண்டு ஆண்டு பணி அனுபவம் தேவை இல்லை
UAE: ஐக்கிய அரபு அமீர சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு அமைச்சகம் மற்றும் பிற அமைப்புகள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இது செவிலியர் பணிகளுக்காக அமீர்கம் செல்பவர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும்.
ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை அமீரத்தில் நர்சிங் உரிமம் பெற இரண்டு ஆண்டு பணி அனுபவம் தேவைப்பட்டது. எனினும் இந்த உரிமத்தை பெற இனி இந்த அனுபவம் தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய ‘யுனிஃபைட் ஹெல்த்கேர் புரொபஷனல் தகுதித் தேவைகள்’ அறிவுறுத்தலின் படி, நர்சிங் இளங்கலைப் பட்டம் பெற்ற, பதிவுசெய்யப்பட்ட செவிலியர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நர்சிங் உரிமங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியைத் தவிர இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியதில்லை.
சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு அமைச்சகம், சுகாதாரத் துறை - அபுதாபி, துபாய் சுகாதார ஆணையம் மற்றும் ஷார்ஜா சுகாதார ஆணையம் ஆகியவை இணைந்து இந்த புதிய புதுப்பிப்பை வழங்கியுள்ளன.
மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்ட UAE-இந்தியா இண்டிகோ விமானம்; காரணம் என்ன?
இப்போது வரை, பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் தங்கள் பட்டப்படிப்புக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் உரிமத் தேர்வுகளில் தோன்றுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவம் தேவையாக இருந்தது. இந்த தளர்வு இளம் மற்றும் தகுதி வாய்ந்த திறமைசாலி செவிலியர்கள்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய வழி வகுக்கும். மேலும், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த செவிலியர்கள், நர்சிங் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு இது மிகுந்த ஊக்கத்தை அளிக்கும்.
குறைந்தபட்சம் இரண்டு வருட கால நர்சிங் பட்டம் பெற்ற பதிவுசெய்யப்பட்ட செவிலியர்களுக்கு உரிமம் பெற எந்த பணி அனுபவமும் தேவையில்லை. இருப்பினும், அவர்களின் பதிவு கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து இருக்க வேண்டும்.
18 மாதங்களுக்குக் குறையாத பாடநெறிக் காலத்துடன் நர்சிங் டிப்ளமோ பெற்ற உதவி செவிலியர்களும் உரிமம் பெற எந்த பணி அனுபவமும் கொண்டிருக்க வேண்டியதில்லை.
புதிய புதுப்பித்தலின் 'தேவைகள் மற்றும் பரிசீலனைகள்' பிரிவின் படி, செவிலியர்கள் தேசிய மற்றும்/அல்லது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாக இருக்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரக பட்டதாரிகளுக்கு, திட்டமும் பல்கலைக்கழகமும் கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நல்ல செய்தி
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உரிமத்திற்கு விண்ணப்பிக்க எந்த அனுபவமும் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
ஒரு தொழில்நுட்ப வல்லுநர் ஒரு அங்கீகாரம் பெற்ற பாட திட்டத்தில் டிப்ளமோ அல்லது சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான, அதாவது, மருத்துவ ஆய்வகப் பாடங்கள் மற்றும் மருத்துவப் பயிற்சியை உள்ளடக்கிய தகுதியை வழங்கும், குறைந்தபட்சம் இரண்டு வருட படிப்பு காலம் அல்லது உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு தொழில்நுட்பவியலாளர் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்/மருத்துவ ஆய்வக அறிவியல் அல்லது உயிரியல் மருத்துவ அறிவியலில் இளங்கலை பட்டம் (பேச்சுலர் ஆஃப் சயின்ஸ்) பெற்றிருக்க வேண்டும்.
சுகாதாரத் துறையில் சேர்வதற்கான இந்த தளர்வுகள் நர்சிங் சமூகம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெறத் தொடங்கியவுடன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | UAE: 3 இந்தியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், இரே இரவில் லட்சாதிபதி ஆனார்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ