அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மீண்டும் ஒரு இந்திய அமெரிக்கரை தனது அரசின் நிர்வாகத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளார். நிஷா தேசாய் பிஸ்வாலை பரிந்துரைக்கும் தனது விருப்பத்தை அவர் அறிவித்துள்ளார். நிஷா தேசாய் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் அதிகம் காணக்கூடிய இந்திய அமெரிக்க முகங்களில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் ( United States International Development Finance Corporation US IDFC) துணை தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுவதற்கான அவரது நியமனம் இப்போது அமெரிக்க செனட்டால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஸ்வால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் வெள்ளை மாளிகையில் உள்ள சர்வதேச மேம்பாட்டுத் திட்டங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர்.  அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் தனியார் துறை இரண்டிலும் பணியாற்றியுள்ளார். அமெரிக்க - இந்தியா உறவுகளில் நிபுணரான அவர், தற்போது அமெரிக்க வர்த்தக சபையில் சர்வதேச மூலோபாயம் மற்றும் உலகளாவிய முயற்சிகளுக்கான மூத்த துணைத் தலைவராக உள்ளார். யுஎஸ்-இந்தியா வர்த்தக கவுன்சில் மற்றும் யுஎஸ் பங்களாதேஷ் வர்த்தக கவுன்சிலை மேற்பார்வையிடுகிறார்.


முன்னதாக அவர் 2013 முதல் 2017 வரை அமெரிக்க ராஜீய துறையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளராகப் பணியாற்றினார். அங்கு அவர் அமெரிக்க - இந்தியா மூலோபாயக் கூட்டாண்மையில் பணியாற்றியுள்ளார். இதில் வருடாந்திர யுஎஸ் - இந்தியா மூலோபாயத் திட்டம் மற்றும் வணிக பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றுள்ளார். அவர் 2017 ஆம் ஆண்டில் பெற்ற இந்திய அரசாங்கத்தின் உலகளாவிய இந்தியர்களுக்கான உயர்மட்ட கௌரவமான பிரவாசி பாரதிய சம்மான் விருதையும் பெற்றவர்.


மேலும் படிக்க | அறிவியல் திறமை தேடல் விருது! அசத்திய இந்திய - அமெரிக்க மாணவர்கள்!


பிஸ்வால் மத்திய ஆசியாவுடனான C5+1 உரையாடலையும், உதவி செயலாளராக இருந்த காலத்தில் அமெரிக்க-வங்காளதேச கூட்டாண்மை உரையாடலையும் தொடங்கினார். அதற்கு முன், பிஸ்வால், தெற்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் USAID திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை இயக்கி, மேற்பார்வையிட்டு, சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜென்சியில் (USAID) ஆசியாவிற்கான உதவி நிர்வாகியாக இருந்தார்.


ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்க நிர்வாக துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ள அவர், மாநில மற்றும் வெளிநாட்டு செயல்பாடுகள் துணைக் குழுவின் பணியாளர் இயக்குநராகவும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வெளிநாட்டு விவகாரக் குழுவில் தொழில்முறை ஊழியர்களாகவும் பணியாற்றினார். பிஸ்வால் தன்னார்வ வெளிநாட்டு உதவிக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றுகிறார். தேசிய ஜனநாயக நிறுவனம் மற்றும் அமெரிக்க அமைதிக்கான சர்வதேச ஆலோசனைக் குழு ஆகிய இரு குழுவிலும் உள்ளார்.


மேலும், இவர் யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் ஆப்கானிஸ்தான் ஆய்வுக் குழுவின் உறுப்பினராகவும், ஆஸ்பென் இன்ஸ்டிட்யூட்டின் இந்தியா-அமெரிக்க ட்ராக் 2 டயலாக் ஆன் காலநிலை மற்றும் எரிசக்தியின் உறுப்பினராகவும் உள்ளார். பிஸ்வால் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆவார். அங்கு அவர் சர்வதேச உறவுகள் மற்றும் பொருளாதாரம் படித்தார்.


சில நாட்களுக்கு முன், வர்த்தகக் கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைக் குழுவில் ஃப்ளெக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரேவதி அத்வைதி மற்றும் இயற்கை வள பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி மணீஷ் பாப்னா ஆகிய இரு இந்திய-அமெரிக்கர்களை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார். 


மேலும் படிக்க | Trade Policy: அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளுக்கான ஆலோசனைக் குழுவில் 2 இந்திய-அமெரிக்கர்கள் நியமனம்!