வேதாந்த் படேல், தினசரி வெளியுறவுத் துறை செய்தி மாநாட்டை நடத்திய முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெயரை பெற்றுள்ளார். படேல் அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் விடுமுறையில் இருப்பதால், செவ்வாயன்று கலிபோர்னியாவைச் சேர்ந்த 33 வயதான படேல், வெளியுறவுக் கொள்கைப் பிரச்சினைகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில், அரசின் சார்பில் விளக்கங்களையும் தகவல்களையும் அளித்தார்.  இந்நிலையில், அவர் தற்போது, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செய்தியாளர் மாநாட்டின் போது, ​​படேல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு, JCPOA தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் பிரதமரானது ஆகியவை குறித்து பேசினார்.  அவரது அடுத்த பத்திர்க்கையாளர் சந்திப்பு புதன்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது.


வேதாந்த் படேலைப் பற்றி  சில தகவல்கள்:


1. குஜராத்தில் பிறந்த வேதாந்த் படேல் (33) ரிவர்சைடில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.


2. வேதாந்த் படேல் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பிடனின் உதவி செய்தித் தொடர்பாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.


மேலும் படிக்க | கனடா மாணவர் விசா குறித்து பலரும் அறிந்திராத ‘ஒரு’ தகவல்!


3. குஜராத்தில் பிறந்த படேல், ரிவர்சைடில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.  இதற்கு முன்பு வெள்ளை மாளிகையில் அதிபர் பிடனின் உதவி செய்தித் தொடர்பாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.


4. அவர்  பொதுத் தேர்தல்களில் பிடன் பிரச்சாரத்தில் தகவல் தொடர்பு பதவிகளையும் வகித்தார்.


முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற  உறுப்பினர், பிரமிளா ஜெயபாலிடம் தகவல் தொடர்பு இயக்குனராகவும், மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் மைக் ஹோண்டாவிடம் தகவல் தொடர்பு இயக்குநராகவும் படேல் பணியாற்றினார். உலக அரங்கில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு பெரிய பொறுப்பு, வேதாந்த்  படேல் இந்த பொறுப்பை சிறப்புடன் கையாளுவார் என நம்பப்படுகிறது. 



மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ