கோவில்பட்டியைச் சேர்ந்தவர்கள்  சுப்பிரமணியம், தர்மலட்சுமி தம்பதியினர் இவர்களின் மகன் முத்துமாரியப்பன் 8 வருடங்களாக மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேம்ரூனிற்கு சென்று அங்கு தங்கிருந்து ஆயில் மற்றும் கேஸ் நிறுவனத்தில் சி.என்.சி. மெசின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவருக்கும் அங்கு அதே நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக பணியாற்றி வந்த எம்மா எஞ்சிமா மொசொக்கே என்பவரின் மகளான வால்மி இனாங்கா மொசொக்கேக்கும் இடையே காதல் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் அவர்களது காதலை அவரவர் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளனர். 



இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த வால்மி இனாங்கா மொசொக்கே இந்தியாவிற்கு சென்று இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை அவரது வீட்டில் தெரிவித்துள்ளார். 


இதற்கு அவரது தாயாரும் உறவினர்களும் சம்மதம் தெரிவித்ததையடுத்து உறவினர்கள் 10 பேருடன் இந்தியா வந்து.  இன்று கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ வெகு விமர்சையாக இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.


மேலும் படிக்க | மணமேடையில் மணமகன் செய்த வேலையால் குஷியான மணப்பெண்: வைரல் வீடியோ


இதில் மணமகளை பட்டுபுடவை கட்டி அவரது உறவினர்கள் மலர் பந்தலின் கிழ் ஊர்வலமாக மணமேடைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து மந்திரங்கள் ஓத ஆப்பிரிக்க மணப்பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கேவிற்கு தமிழக மணமகன் முத்துப்பாண்டி தாலி கட்டினார். தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக்கொண்டு அம்மி மிதித்து மெட்டி அணிவித்தார்.