காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா "Et tu, Karnataka?" (யூ டூ கர்நாடகா - நீயுமா கர்நாடகா) என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

234 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் கடந்த மே 12-ஆம் நாள் 222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் 72.13% வாக்குகள் பதிவாகின.


இந்த வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. இதில் பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா 111 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது... பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தகவல்கள் வெளியாக தொடங்கிய நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, "Et tu, Karnataka?" (யூ டூ கர்நாடகா - நீயுமா கர்நாடகா) என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!



ஜூலியஸ் சீசர் கதையில், "யூ டூ ப்ரூட்டஸ்?"; எனக் கேட்டுவிட்டு சீசர் அவரது எதிரிகளின் தாக்குதலை தடுக்காமல் இறந்து போவார்.இந்ந கதைக்கு பிறகு துரோகத்தை சுட்டிக் காட்டும்போதெல்லாம் "யூ டூ ப்ரூட்டஸ்?" எனக் சுட்டிக்காட்டுவது வழக்கம்.


அந்த வகையில், கர்நாடகா மக்கள் துரோகம் இழைத்து விட்டனர் என சுட்டிக்காட்டும் வகையில் வகையில் ஒமர் அப்துல்லா இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


ஆனால் இதற்கு மாறாக தற்போது கர்நாடகாவில் பாஜக-விற்கு எதிராக காங்கிரஸ்-JDS கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருகிறது. இதனால் பாஜக ஆட்சி அமைப்பது மீண்டும் கனவாக மாறியுள்ளது!