1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புக்களுக்கான புதிய பாடத்திட்ட புத்தகங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்துவருகிறார். இந்நிலையில், பள்ளிமாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை இன்று அறிமுகம் செய்கிறார்! 


தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வதற்காக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கல்வியாளர்கள், 


பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு தயார் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அரசின் புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய பாடத்திட்ட புத்தகங்களை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி.


புதிய பாடத்திட்ட புத்தகங்கள் குறித்து ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் என அறிவித்துள்ளனர்!