``ஸ்டெர்லைட் ஆலையை` நிரந்தரமாக மூடுங்கள்: கூறிய ஸ்டாலின்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் பேராபத்தை அரசுக்கு எச்சரிக்கும் வகையில் பொதுமக்கள் முன்னெடுத்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவினை தெரிவிப்பதோடு, ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எவ்வித அனுமதியையும் வழங்கக்கூடாது என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கெடுக்காத வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதை சட்டங்கள் வலியுறுத்தும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் தாமிரபரணி ஆறும், அதனால் பயன்பெறக்கூடிய விளைநிலங்களும் பாழ்பட்டுக் கிடப்பதோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களின் உயிருக்கும் உலைவைக்கும் வகையில் புற்றுநோய், தோல்நோய்கள் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை உருவாக்கி வருகிறது. இந்த ஆலையினால் நிலத்தடி நீரில் தாமிரம், ஆர்சனிக், புளோரைடு, குரோம் உள்ளிட்ட நச்சுப்பாதிப்புகள் கலந்துள்ளன. நிலத்தடி நீர் பாழ்பட்டதால் மண் பாதிப்படைந்து மக்களின் உயிர்ப்பலி தொடர்கிறது.
அதேபோல், மண்ணுக்கும் மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையினால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமேயானால் அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, மக்களின் உயிரை காவு வாங்கும் இதுபோன்ற கேடான செயல்பாடுகளை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்திட வேண்டும் என்றார்.