சத்தியராஜ்: கட்டப்பாவின் Bahubali அவதாரங்களும், அரிச்சுவடியும் in pics
நடிகர்கள் கமல்ஹாசன், பிரகாஷ் ராஜ் போன்று சத்யராஜும் நாத்திகர். பெரியாரை பெரிதாக கருதும் சத்யராஜ் திராவிட கொள்கைகளில் பிடிப்புள்ளவர். பிறகு, திரைப்படமாக பெரியாரின் வாழ்க்கை எடுக்கப்பட்ட போது, பெரியாராகவும் வாழ்ந்தார் சத்யராஜ்.
நடிப்புலகில் குறிப்பிடத்தக்க பெயர் பெற்ற சத்யராஜின் பிறந்த நாள் இன்று... Happy birthday Sathyaraj!!
ஆரம்பக்காலங்களில் வில்லனாக களம் இறங்கி, குணச்சித்திர வேடங்களில் கலக்கி, ஹீரோவாக மாறிய உழைப்பாளி சத்தியராஜ்...
1986ஆம் ஆண்டு ‘மிஸ்டர் பாரத்’ என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு அப்பாவாக நடித்தார் சத்யராஜ். அதில் சுவராசியமான விஷயம் என்னவென்றால், உண்மையில் ரஜினிகாந்தை விட 4 வயது சிறியவர் சத்யராஜ் என்பதே...
1954ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி கோவையில் பிறந்த சத்யராஜின் உண்மையான பெயர் ரங்ராஜ் சுபையா, தாவரவியலில் பி.எஸ்..சி படித்தார். சினிமாவுக்காக வீட்டை விட்டு வெளியேறிய இளைஞன் சுப்பையா, சத்யராஜாக.அவதாரம் எடுத்தார்.
1979 ஆம் ஆண்டில் திரைப்படத் தயாரிப்பாளர் எம்.சிவகுமாரின் மருமகள் மகேஸ்வரியை திருமணம் செய்த சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜும் பிரபல நடிகர் தான்.
பாடகராகவும் அவதாரமெடுத்துள்ளார் சத்யராஜ். 'குரு சிஷ்யன்' திரைப்படத்தில் பின்னணி பாடகராக களம் இறங்கினார் இயக்குநர், கதாநாயகன் சத்யராஜ்...
'வில்லாதி வில்லன்'. என்ற திரைப்படத்தையும் சத்யராஜ் இயக்கியுள்ளார். 1995ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் இயக்குநரும் அவரே, கதாநாயகனும் அவரே. இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றது. முன்னணி நடிகை நக்மா கதாநாயகி.
தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் சத்யராஜ். ஸ்டார் விஜய் டிவியில் “ஹோம் ஸ்வீட் ஹோம்” என்ற நிகழ்ச்சியை நடத்தினார் சத்யராஜ்
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் தமிழக முதல்வராக இருக்க வேண்டும் என்ற சத்தியராஜுக்கு ஆசை உள்ளது. பல படங்களில் அரசியல் தலைவராக நடிக்கும் சத்யராஜ், கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் அரசியலுக்கு வந்திருப்பது முதல்வராவதற்கு மட்டுமே என்று நம்புகிறார். ரஜினிகாந்தின் அரசியல் பார்வையை விமர்சிப்பவர் சத்யராஜ். கம்யூனிசத்தில் நம்பிக்கை கொண்ட சத்யராஜுக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு உண்டு.
இந்திய நடிகர்களில் இருவரை சத்தியராஜ் தனது குருவாக நினைத்தார். தமிழில் எம்.ஜி.ஆர் என்றால், இந்தியில் ராஜேஷ் கன்னா... (Picture courtesy: Twitter)