Guaranteed Emergency Loan எந்த உத்தரவாதமும் இல்லாமல் அவசர கால கடன் உதவி பெறலாம்

Sat, 28 Nov 2020-3:13 pm,

தேசிய கடன் உத்தரவாத டிரஸ்டி கம்பெனி லிமிடெட் (NCGTC) அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் இரண்டாவது பகுதிக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த 12 ஆம் தேதி "சுயசாா்பு இந்தியா" திட்டத்தின் கீழ் மூன்றாவது தொகுப்பில் 2.65 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.

அவரின் அறிக்கையின்படி, அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் (Emergency Credit Line Guarantee Scheme) இரண்டாவது பகுதியில் 2020 பிப்ரவரி 29 நிலவரப்படி, ரூ .50 கோடிக்கு மேல் கடன்களும் அல்லது அதற்கும் குறைவாக ரூ .500 கோடி வரை கடன்கள் உள்ளவர்களுக்கு 60 மாத தவணை அளிக்கப்படுகிறது. அதில் இரு ஒரு வருட தவணை விலக்கு அளிக்கப்படும்.

ALSO READ | தன்னம்பிக்கை இந்தியா 3.0 திட்டத்தில் யார் அதிகம் பயனடைவார்கள்- இதோ முழு விவரம்!!

ஈ.சி.எல்.ஜி.எஸ் (National Credit Guarantee Trustee Company) 2.0 இன் கீழ் கடனின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதில் 12 மாதங்களுக்கு விலக்கு இருக்கும். இதன் அடிப்படையில் கடன் வாங்குபவர்கள் மொத்த கடனில் 20 சதவீதம் வரை கூடுதல் கடன் பெறலாம். எந்தவொரு உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவசரகாலக் கடனளிப்பு (GECL) இல்லாமல் இது முற்றிலும் இருக்கும். இதற்காக கடன் வாங்குபவர் எந்த உத்தரவாதமும் கொடுக்க தேவையில்லை.

 

அந்த அறிக்கையின்படி, நவம்பர் 12 ஆம் தேதி வரை வங்கிகளும் நிதி நிறுவனங்கள் 61 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) ரூ 2.05 லட்சம் கோடி வரை வழங்க இலக்கு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், இதுவரை ரூ .1.52 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. (Photo: Reuters)

இந்திய ரிசா்வ் வங்கி (Reserve Bank of India) நியமித்த கே.வி. காமத் குழு (Kamat Committee Constituted) அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட, சுகாதாரம், மின்சாரம், கட்டுமானம், ரியல் எஸ்டேட், ஜவுளி, மருந்துகள், தளவாடங்கள், எரிசக்தி துறை, சிமென்ட், வாகன பாகங்கள், சுற்றுலா, ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளுக்கு கடன் அளிக்கப்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link