டிசம்பர் மாத பலன்கள்: சிலருக்கு சந்தோஷம்... சிலருக்கு சங்கடம்... அதிர்ஷ்ட ராசிகள் எவை

Thu, 28 Nov 2024-10:03 am,

மேஷம்: டிசம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கொடுக்கும். வேலையில், தொழிலில், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். எனினும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்: டிசம்பர் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். மன மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்ப சூழ்நிலையும் நன்றாக இருக்கும். காதல் உறவுகளில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன.

மிதுனம்: டிசம்பர் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். இருப்பினும், இந்த மாதம் பட்ஜெட் போட்டு செலவினை கவனமாக செய்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், இல்லையெனில் நிதி சிக்கல்கள் ஏற்படலாம். நண்பருடன் சந்திப்பு சாத்தியமாகும்.

கடகம்: டிசம்பர் மாதம் கடக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். நிதி விவகாரங்கள் தீர்வை நோக்கி செல்லும். தொழிலுக்கு நல்ல காலம் அமையும். எனினும், இந்த மாதம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சிறிது கவலை தரும் சூழ்நிலை உருவாகும்.

சிம்மம்: டிசம்பர் மாதம்  சிம்ம ராசிக்காரர்களுக்கு நற்பலனகளை கொடுக்கும் மாதமாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.பணியில் இருந்த தடைகள் நீங்கும். உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பயண வாய்ப்பு உண்டு.

கன்னி: டிசம்பர் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு ஒரு இயல்பான மாதமாக இருக்கும். இருப்பினும், பொருளாதார விஷயங்கள் போன்ற சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு நண்பரை சந்திக்கலாம். சரும தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

துலாம்: டிசம்பர் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும். சில காரியங்களில் தடைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். விடா முயற்சியை மேற்கொள்ளவும். உறவுகள் மேம்படும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

விருச்சிகம்: டிசம்பர் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுபபலன்கள் நிறைந்த மாதமாக இருக்கும். பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பீர்கள்.  பண வரவு குறித்த நல்ல செய்திகள் கிடைக்கலாம். காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். எனினும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு: டிசம்பர் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். நிதி நிலை வலுவாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் உயர்வு உண்டாகு. நிலம், கட்டிடம், வாகனம் வாங்கலாம்.

மகரம்: டிசம்பர் மாதம் மகர ராசியினருக்கு பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்பம்: டிசம்பர் மாதத்தில், கும்ப ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனினும், வேலையில் முன்னேற்றம் காணலாம். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஆனால் கவனம் தேவை. தொழில் ரீதியாகவும் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மீனம்: டிசம்பர் மாதம் மீன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய மாதம். நிதி ரீதியாக இது ஒரு நல்ல காலமாக, பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். என்றாலும், உடல் ஆரோக்கிய நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link