கலைமகள் சரஸ்வதியின் கடாட்சத்தை பூரணமாக பெற அறிவுத்தேடல் தொடங்கும் விஜயதசமி நாள்!
விஜயம் அதாவது வெற்றித் திருநாளான இன்று புதிய பணியை தொடங்கினால், அது வெற்றியைத் தரும்.... விஜயதசமி அன்று துவங்கும் வேலை வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்கும் தொடக்கமாக இருக்கும்
நவராத்திரி பத்தாம் பத்தாம் நாளான்று அம்பிகையை விஜயாம்பாளாக அதாவது அன்னை பார்வதியின் அம்சமாக வழிபடலாம்
விஜய தசமி நாளன்று, அன்னைக்கு பால் பாயாசம், இனிப்பு வகை, பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சதாம், நைவேத்யம் செய்ய வேண்டும்.
குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் வித்யாரம்பம், இந்தியாவில் பாரம்பரிய சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். இன்று எந்தவொரு கற்றலையும் தொடங்குவதற்கு நல்ல நாள்
கலைமகள் சரஸ்வதியின் கடாட்சம் இன்று பூரணமாக இருக்கும். இன்று தொடங்கும் அறிவுத்தேடல் என்றென்றும் ஆக்கப்பூர்வமாக தொடரும்
சரஸ்வதியே ஞானத்தின் தெய்வம், கலைகளின் உறைவிடம், அன்னையின் அருள் இருந்தால் வித்தைகள் அனைத்தும் கைகூடும்
இந்த குரோதி ஆண்டின் சாரதா நவராத்திரியின் வழிபாடுகள் முடிந்து, புதியதாக கற்கத் தொடங்குவோம்...