2024 Hit Movies : 2024ல் ரிலீஸான 124 படங்களில் 6 படங்கள் மட்டுமே ஹிட்! என்னென்ன தெரியுமா?

Wed, 03 Jul 2024-11:29 am,

2024 திரைப்படங்கள்:

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடத்தில் தமிழ் திரையுலகமே கொஞ்சம் காய்ந்து போய்தான் இருக்கிறது. பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் 2020ன் முதல் பாதியில் வெளியாகவில்லை. இதுவரை தமிழில் 124 படங்கள் வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதில், 6 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியிருக்கிறதாம். அவை என்னென்ன படங்கள் தெரியுமா? 

ஸ்டார்:

கவின் நடிப்பில் மே மாதம் 10ஆம் தேதி வெளியான படம், ஸ்டார். இதனை இயக்குநர் இளன் இயக்கியிருந்தார். இந்த படம் ஓடிடியில் வந்த பிறகுதான் நெகடிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. ஆனால் திரையரங்கிள் ஓடிக்கொண்டிருந்த போது இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களையே மக்கள் கொடுத்தனர். இந்த படம் 2020ல் மக்கள் மனம் கவர்ந்த படங்களுள் ஒன்றாகும்.

விஜய் ஆண்டனி நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியான படம், ரோமியோ. இதில் இவருக்கு ஜோடியாக மிரிணாளினி ரவி நடித்திருப்பார். இந்த படமும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. 

பிடி சார்:

ஹிப் ஹாப் ஆதி நடித்திருந்த படம், பிடி சார். இந்த படம் மே மாதம் 24ஆம் தேதி வெளியானது. இதனை கார்த்திக் வேனுகோபாலன் இயக்கியிருந்தார். இந்த படமும் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று, பட்ஜெட்டிற்கு மேல் கலெக்ட் செய்திருந்தது. 

மகாராஜா:

பல மாதங்களுக்கு பிறகு விஜய் சேதுபதியின் கம்-பேக் படமாக பார்க்கப்பட்டது, மகாராஜா திரைப்படம். பழிவாங்கும்-த்ரில்லர் படமான இது மக்களிடையே ஜூன் 14ஆம் தேதி வெளியான போது நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படம் இப்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது. 

லவ்வர்:

மணிகண்டன் நடிப்பில் உருவான படம் லவ்வர். இதனை பிரபு ராம் வியாஸ் இயக்கியிருந்தார். டாக்ஸிக் காதல் கதையை வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம், இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. 

கருடன்:

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கும் படம் கருடன். இந்த படம், மே 31ஆம் தேதி வெளியானது இந்த படத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்தனர். 2024ல் ஹிட் ஆன படங்களுள் இதுவும் ஒன்று. 

அரண்மனை 4:

சுந்தர்.சி இயக்கத்தில் மே 3ஆம் தேதி வெளியான படம், அரண்மனை 4. இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படமும் மக்களின் வரவேற்பினை பெற்றிருந்தது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link