பூராடத்தில் சூரியன்.... 2025 புத்தாண்டில் பட்டையை கிளப்ப போகும் 3 ராசிகள் இவை தான்...
சூரியனின் நிலையில் மாற்றம்: கிரகங்களின் ராஜாவான சூரியன், 12 ராசிகளில் ராசி பெயர்ச்சியாவதுடன், அதற்கிடையில் நட்சத்திர பெயர்ச்சியையும் மேற்கொள்வது சுப மற்றும் அசுப விளைவுகளை கொடுக்கிறது. டிசம்பர் மாதத்தில் சூரியன் தனது நிலையை 3 முறை மாற்றிக் கொள்கிறது.
டிசம்பர் மாத பெயர்ச்சிகள்: டிசம்பர் 2, டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 29 ஆகிய தேதிகளில் சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும். டிசம்பர் 2, 2024 திங்கட்கிழமை இரவு 07:18 மணிக்கு சூரியன் கேட்டை நட்சத்திரத்தில் நுழையும்.
மூல நட்சத்திரத்தில் சூரிய பகவான்: டிசம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 10:19 மணிக்கு மூல நட்சத்திரத்தில் நுழையும் சூரிய பகவான், 29 டிசம்பர் 2024, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:34 மணிக்கு பூராட நட்சத்திரத்தில் நுழைகிறார்.
பூராட நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சியாவதினால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் பெரிதும் பலனடைவார்கள். சூரியனின் நட்சத்திர மாற்றம் காரணமாக, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் 2025 புத்தாண்டில் அதிர்ஷ்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்: சூரியன் பெயர்ச்சி காரணமாக, மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும். வெற்றியை நோக்கி அடி எடுத்து வைப்பார்கள். கடின உழைப்பில் முழுமையாக கவனம் செலுத்துங்கள். வெற்றியின் மூலம் சமூகத்தில் உங்களுக்கான ஒரு புதிய அடையாளம் உருவாகும். ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.
கன்னி: சூரியன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார பலம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.தொழில், வியாபாரம் தொடர்பான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் கடின உழைப்பின் பலன் விரைவில் கிடைக்கும்.
மீனம்: சூரியன் பெயர்ச்சி மீன ராசியினருக்கு நன்மைகளை அள்ளித் தரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். செல்வம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தாண்டுக்கு முன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களைக் கேட்கலாம். வருமான உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்தத் தகவல்களுக்கு ZEE News பொறுப்பேற்காது.