டவ் ஷாம்பூ போன்று... இந்தியாவில் திரும்பப் பெறப்பட்ட புகழ்பெற்ற பொருள்கள் - இதோ...

Wed, 26 Oct 2022-11:00 pm,

ஆகஸ்ட் 4, 2010 அன்று ஜான்சன் & ஜான்சன் அதன் தவறான இடுப்பின் உள்வைக்கும் செயற்கை கருவியை திரும்ப பெற்றது. அதாவது, விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இடுப்பு பகுதிகளில் வைக்கப்படும் உலோகத்தினால. இருப்பினும், அவை இந்தியாவில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்டு நோயாளிகளிடையே பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அவை பொருத்தப்பட்ட நோயாளிகள் கடுமையான விளைவுகளைச் சந்தித்து நிலைமையை மோசமாக்கியபோது இந்த சர்ச்சை வெடித்தது.

நெஸ்லே இந்தியா தனது பிரபலமான நூடுல்ஸ் தயாரிப்பான ‘மேகி’யை இந்திய சந்தையில் இருந்து திரும்பப் பெற்றது மேகி பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை 2015இல் மேகி சர்ச்சை வெடித்தது. பல மாதங்களாக மேகி தடையை எதிர்த்து சட்டப்பூர்வ மனுக்களுடன் தொடர்ந்தது. இறுதியாக, குற்றச்சாட்டுகளுக்கு எதிரான முழுமையான விசாரணைகள் மற்றும் தயாரிப்பில் அதிகப்படியான LEAD இல்லை என்று கண்டறியப்பட்ட பின்னர் தடை ரத்து செய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டில், தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தான பொருள்களை கொண்டதன் காரணமாக, 'Restless Energy Drink'-ஐ திரும்பப் பெற இந்தியாவின் உணவு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இதில், மான்ஸ்டர், சிங்கா, கிளவுட் 9 போன்றவை அடங்கும்.

உடல்நலக் குறைவு காரணமாக, ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது கடைகளில், சில காபி ஃபிளேவர்களை நீக்கியது. இந்திய உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதிய குறிப்பிட்ட பொருட்களைப் பயன்படுத்தியதால், பொருட்கள் தடைசெய்யப்பட்டன.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link