ஐபிஎல் விளையாட்டின்போது தேடப்படும் 4 பெண்கள்

Tue, 22 Mar 2022-4:39 pm,

ஷில்பா ஷெட்டி:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குதாரரான ஷில்பா ஷெட்டி, அந்த அணிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக மைதானத்துக்கு வந்துவிடுவார். சிக்சர், பவுண்டரி அடிக்கும்போதெல்லாம் துள்ளிக் குதிக்கும் அவர், ரசிகர்களையும் கைதட்டி உற்சாகப்படுத்துமாறு அடிக்கடி சைகை செய்வார். கேமரா ஸ்கிரீனில் அவர் வரும்போதெல்லாம், மைதானம் களைகட்டும்.

நீட்டா அம்பானி; இவர் இல்லாமல் மும்பை அணி மேட்ச் விளையாடியதை பார்த்திருக்க வாய்ப்பில்லை. தவறாமல் மும்பை அணி விளையாடும்போது களத்துக்கு வந்துவிடும் நீட்டா அம்பானி, இக்கட்டான சமயங்களில் கைகூப்பி சாமி கும்பிடத் தொடங்கிவிடுவார். மும்பை வெற்றிபெற்றுவிட்டால், நீட்டா அம்பானியின் மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்லமுடியாது. அந்தளவுக்கு துள்ளிக் குதிப்பார்.

ப்ரீத்தி ஜிந்தா; ஐபிஎல் தொடங்கியவுடன், அணி உரிமையாளர்களில் பிரபலமானவர் ப்ரீத்தி ஜிந்தா. பஞ்சாப் அணி வெற்றி பெற்றுவிட்டால் அலாதி மகிழ்ச்சி கொள்ளும் ப்ரீத்தி ஜிந்தா, வீரர்களை ஆரத் தழுவி வரவேற்பார். பின்னர் இதுவே மீம் கன்டென்டாகவும் மாறியது. தோல்வியை தழுவும்போது சோகதின் உட்சத்துக்கே சென்றுவிடுவார். 

காவ்யா மாறன்: சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், கடந்த சில ஆண்டுகளாக லேட்டஸ்ட் டிரெண்டில் உள்ளார். எக்ஸ்பிரசன் குயீன் எனும் அழைக்கப்படும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார். ஒவ்வொரு பந்துக்கும் அவருடைய எகஸ்பிரசனை கேமராமேன் தவறாமல் ஃபோக்கஸ் செய்துவிடுவார். ஒரு போட்டியில் 100 எக்ஸ்பிரசன்கள் அவரின் முகத்தில் இருந்து வெளிப்பட்டுவிடும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link