ஜூன் மாதத்தில் வெளியாகும் 4 பான் இந்திய படங்கள்!
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நானியின் அண்டே சுந்தராணிகி என்கிற காமெடி திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் நானி மற்றும் நஸ்ரியா நஜிம் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 10ஆம் தேதி வெளியாகிறது.
777 சார்லி ஒரு கன்னட மொழி படமாகும், இதில் ரக்ஷித் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் ஜூன் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.
மேஜர் 26/11 அன்று மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை மையமாக வைத்து உருவான படம் ஆகும். இது தியாகி மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் கதையை சொல்லும் படியாக எடுக்கப்பட்டு உள்ளது. இப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படம் பான் இந்திய படமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் மற்றும் சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.