5 வீரர்கள் போட்டி!! சச்சின் சாதனையை நெருங்கும் முதல் வீரர் யார்?
5. ஜோ ரூட் 23 சதங்கள்: இங்கிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 23 சதங்களை அடித்துள்ளார். 26 வயதான ஜோ ரூட் இங்கிலாந்தின் அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்கிறார். இவர் 60 டெஸ்ட் போட்டிகளில் 13 சதங்களை அடித்துள்ளார். அதேபோல 97 ஒருநாள் போட்டிகளில் 10 சதங்கள் அடித்துள்ளார். டெண்டுல்கரின் சாதனை அவருக்கு தொலைவில் இருந்தாலும், விராத் கோலிக்கு 50 சதங்கள் சாதனை நெருங்கி விடுவார்.
4. கென் வில்லியம்சன் 27 சதங்கள்: தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருக்கிறார். இவர் 2010-ல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவர் 61 டெஸ்டில் 17 சதங்களும், 117 ஒருநாள் போட்டிகளில் 9 சதங்களும் அடித்துள்ளார். விரைவில் விராத் கோலிக்கு 50 சதங்கள் சாதனை நெருங்கி விடுவார். டெண்டுல்கரின் சாதனையை நெருங்குவாரா என்பதை பார்ப்போம்.
3. ரோஸ் டெய்லர் 33 சதங்கள்: நியூசிலாந்து வீரரான இவருக்கு தற்போது 33 வயதாகிறது. ஆனால் இவர் இன்னும் பேட்டிங் செய்வதில் வல்லவராக இருக்கிறார். இவர் 81 டெஸ்டில் 16 சதங்களும், 193 ஒரு நாள் போட்டிகளில் 17 சதங்களும் அடித்துள்ளார். விராத் கோலிக்கு 50 சதங்கள் சாதனை நெருங்கி இன்னும் 17 சதங்கள் தேவைப்படுகிறது. ஆனால் டெண்டுல்கரின் சாதனையை நெருங்குவது என்பது கேள்விக்குறியே?
2. டேவிட் வார்னர் 34 சதங்கள்: 31 வயதான வார்னர் இதுவரை 66 டெஸ்டில் 20 சதங்களும், 101 ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்களும் அடித்துள்ளார். இந்த ஆண்டு (2017) மட்டும் 1313 சர்வதேச ரன்கள் எடுத்துள்ளார். 31 வயதான இவர் விராத் கோலி மற்றும் டெண்டுல்கர் சாதனைகளை உடைப்பாரா? என்பது அடுத்து அவர் அடிக்கும் சதங்களை பொறுத்தே இருக்கிறது.
1. ஏபி டி வில்லியர்ஸ் 46 சதங்கள்: 50 சதங்களை விரைவில் நெருக்கூடியவர். உலகின் சர்வதேச கிரிக்கெட்டில் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவர். காயம் காரணமாக சில காலம் இவர் விளையாடாமல் இருந்தார். ஒருவேளை இவர் காயம் அடையாமல் இருந்தால், 50 சதங்கள் எனும் மைல்கல்லை கடந்திருப்பார். இவர் 106 டெஸ்ட் போட்டிகளில் 21 சதங்களும், 225 ஒருநாள் போட்டிகளில் 21 சதங்களும் அடித்துள்ளார்.