கேரளாவில் மிஸ் பண்ணாமல் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!
கேரளாவில் உள்ள மக்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் அசைவ உணவுகளில் மீன் தவிற்க முடியாத ஒன்று. அதனால் மீன்களில் பலவிதமான உணவு வகைகளை சமைத்து உண்பார்கள். அந்த வகையில் கறிமீன் பொளிச்சது மிகவும் பிரபலமான உணவு. வாழை இலையில் கட்டி சமைக்கும் இந்த கறிமீன் மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
கேரளாவில் ஏராளமான பாயாசம் வகைகள் இருந்தாலும் பாலடை பாயசம் மிகவும் பிரபலமானது. பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம் பிடிக்கும் இந்த பாலடை பாயாசம் முழுக்க முழுக்க பாலை சுண்ட வைத்து தயாரிக்கப்படுகிறது.
தென் இந்திய உணவுகளில் மிகவும் பிரபலமானது பரோட்டோ. இது கேரளாவின் உணவுகளில் பீப் இறைச்சியுடன் உட்கொள்ளும் உணவு பிரியர்கள் ஏராளம். கேரளாவின் பரோட்டா பீப் கரி சுவைக்கு பலரும் அடிமை என்றே கூறலாம்.
திருவோண சத்யகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உணவு இஞ்சி புளி. புளிப்புடன் சிறிய இனிப்பு சுவையும் கலந்து இருக்கும் இஞ்சி புளியை உணவுடன் சேர்த்து உட்கொள்ளும்போது ஜீரன கோளாறு ஏற்படாமல் தவிற்கும். சுவையிலும் அருமையாக இருக்கும்.
கேரளாவில் இருக்கூடிய மக்கள் கள்ளப்பத்தை மிகவும் விரும்பி உட்கொள்வார்கள். தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்படும் கள் அரிசி மாவில் கலந்து தயாரிக்கப்படும் இந்த அப்பத்திற்கு பலரும் அடிமை என்றே கூறலாம்.