உடல் எடையை குறைக்க செய்யக்கூடாத 5 முக்கியமான தவறுகள்!

Sun, 12 Jun 2022-6:20 pm,

கார்டியோவாஸ்குலர் (ஏரோபிக்) பயிற்சி, ஸ்ட்ரென்த் பயிற்சி மற்றும் ஃப்ளெக்சிபிலிட்டி வேலைகள் அனைத்தும் ஒரு நல்ல உடற்பயிற்சி வழக்கத்தின் பகுதியாகும்.  நன்கு சீரான உடற்பயிற்சி உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், பொருத்தமாகவும் வைத்திருக்கும்.  ஸ்ட்ரென்த் பயிற்சிகளுடன் 5-10 நிமிட கார்டியோவின் சர்க்யூட் வொர்க்அவுட்டைச் செய்யலாம்.

 

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, ​​​​தினமும் ஏதாவது ஒரு வகையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது நல்லது.  அதேசமயம் ஒவ்வொரு நாளும் ஒரே பயிற்சி முறையை தொடர்ந்து செய்ய முடியாது.  உதாரணமாக, நீங்கள் வழக்கமாக 40 நிமிடங்கள் நடந்தால், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உங்கள் உடற்பயிற்சி அட்டவணையில் அதைச் சேர்க்கவும்.

 

தினசரி உடற்பயிற்சி செய்வதனால் அதிக பசி ஏற்படும்.  உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்க விரும்பினால் நாளின் முடிவில் ஒரு குறிப்பிட்ட கலோரி பற்றாக்குறையை நீங்கள் அடைய வேண்டியிருக்கும்.  உடற்பயிற்சிக்கு பிறகு அதிக கலோரி உணவுகள் அல்லது அதிக ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவதன் மூலம் மீண்டும் உங்களது உடலில் கலோரிகள் தங்கிகொள்ளும்.

 

வொர்க்அவுட்டின் போது அல்லது அதற்குப் பிறகு ஏதேனும் பானங்களை அருந்தும் எண்ணம் தோன்றலாம். விளையாட்டு வீரர்களுக்கு சில சமயங்களில் விளையாட்டு பானங்கள் தேவைப்படலாம், ஆனால் அதில் நீர் சிறந்த பானமாகும்.  உடற்பயிற்சிக்கு பிறகு சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது பயனற்றது இருக்கும். சந்தையில் இருக்கும் நூற்றுக்கணக்கான தயாரிப்புகள் உங்கள் இருப்பை தான் கரைக்கும்.

 

நீங்கள் ஒவ்வொரு நாளும் ஜிம்மிற்குச் சென்று ஒரு சிறந்த பயிற்சியை மேற்கொண்டால், அது மிகவும் நன்றாக இருக்கும்.  அதேசமயம் ஜிம்மிற்கு செல்லும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை படுக்கையில் செலவிடுகிறீர்கள்.  அவ்வாறு பகலில் உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது ஜிம்மிற்கு செல்லாதது போன்று அர்த்தமாகும்.  அதனால் உங்கள் வீடு அல்லது அலுவலகத்தை சுற்றி நடப்பது, சமைப்பது போன்ற ஏதேனும் ஒரு உடற்செயல்பாடுகளை செய்யவேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link