ஏப்ரல் மாதத்திற்கு முன் வெளியாகும் எஸ்.ஜே.சூர்யாவின் 5 படங்கள்!

Mon, 22 Nov 2021-6:37 pm,

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள படம் பொம்மை.  இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார்.  நீண்ட நாட்களாக ரிலீஸ்க்கு ரெடியாகியுள்ள இப்படம் 2022ல் வெளியாக உள்ளது

 

சிவகார்த்திகேயன் நடிக்கும் DON படத்தில் வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.  இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வெளிவர உள்ளது. 

 

சிம்பு - வெங்கட்பிரபு கூட்டணியில் உருவான மாநாடு படத்தில் ஒரு வில்லன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.  இப்படம் வரும் நவம்பர் 25ம் தேதி வெளிவர உள்ளது. 

 

வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, யாசிகா ஆனந்த் இணைத்து நடித்த படம் கடமையை செய்.  இப்படம் 2022 மார்ச் மாதம் வெளிவர உள்ளது. 

 

தற்போது பெயர் வைக்கப்படாத ஒரு வெப் சீரிஸில் நடித்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.  இதுவும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளிவர உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link