சிறுநீரக கற்களை போக்க உதவும் 5 வகையான எளிய வீட்டு வைத்தியம்!
![kidneystone kidneystone](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/07/07/236206-lemon.jpg?im=FitAndFill=(500,286))
சிட்ரஸ் வகை பழங்களில் குறிப்பாக எலுமிச்சை பழச்சாறை தினமும் பருகினால் சிறுநீரக கற்கள் உருவாகுவது தடுக்கப்படும். மற்ற பழசாறுகளில் கால்சியம் அதிகமாகவும், சிட்ரேட் கம்மியாகவும் இருக்கும், அதனால் எலுமிச்சை சாறு சிறுநீரக கற்களை போக்க உதவும்.
![kidneystone kidneystone](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/07/07/236205-water.jpg?im=FitAndFill=(500,286))
தண்ணீரை போன்றொரு சிறந்த அமிர்தம் வேறெதுவுமில்லை, தினம் 2.7 முதல் 3.7 லிட்டர் வரை தண்ணீர் அருந்தினால் சிறுநீரக கற்கள் உருவாகாது. கிட்னி செயல்பாட்டிற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
![kidneystone kidneystone](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/07/07/236203-fruit.jpg?im=FitAndFill=(500,286))
வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்றவரை குணமாக்க மாதுளை சாறு உதவுகிறது. உடலுக்கு பல நன்மைகளை தரும் இது கிட்னியின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது, மாதுளை சாறு அருந்துவது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
அருகம்புல் சாறு குடிப்பதால் உடலுக்கு பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. இது உடலில் தாங்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுவதோடு, சிறுநீரக கற்கள் உருவாவதையும் தடுக்கிறது.
க்ரீன் டீ குடிப்பது உடலுக்கு பல்வேறு வகைகளில் நன்மைகளை வழங்குகிறது, தற்போது பலரது டயட்டில் க்ரீன் டீ இடம்பெற்றுவிட்டது. மேலும் க்ரீன் டீ குடிப்பது சிறுநீரக கற்கள் தோன்றும் அபாயத்தை குறைக்கிறது.