வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயம் பற்றி அறியப்படாத 5 தகவல்கள்
இந்த ஆலயத்தில் உள்ள தெய்வத்தின் பெயர் விஸ்வநாதர் அல்லது விஸ்வேஸ்வரர் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது. இதன் உண்மையான அர்த்தம் 'பிரபஞ்சத்தை ஆட்சி செய்பவர்' என்று பொருளாகும், மேலும் வாரணாசி நகரம் காசி என்று அழைக்கப்படுவதால் இந்த கோயில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் என்று பிரபலமாக உள்ளது.
இந்த கோயில் இந்துக்களின் புனிதமான கோவிலாக கருதப்படுகிறது, சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயிலில் சில காலங்கள் சிவபெருமானை தங்கியிருந்ததாக நம்பபடுகிறது.
1490ல் காசி விஸ்வநாதர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு சில அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர், சில காலம் பௌத்தர்களால் இந்நகரம் ஆளப்பட்டது. மேலும் இப்பகுதியில் பல படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இந்த கோவிலின் உண்மையான அமைப்பு சில வன்முறைகளால் சிதைக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
ராணி அஹில்யா பாய் ஹோல்கரால் இந்த கோயில் புனரமைப்பு செய்யப்பட்டது. பின்னர் அக்பரின் கொள்ளுப் பேரன் ஔரங்கசீப் இந்த கோவிலை இடித்து அங்கு ஒரு மசூதியைக் கட்டினார். இந்த கோவிலை அழிக்கபோகும் செய்தி அறிந்ததும், சிவன் சிலை அழிக்கப்படாமல் இருக்க கருவறையிலுள்ள சிவன் சிலையை கிணற்றில் பாதுக்காப்பாக மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இங்குள்ள கிணறு "ஞானத்தின் கிணறு" என்று அழைக்கப்படுகிறது, இந்த கிணறு மசூதிக்கும் கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் சுமார் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருகை தருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் காசி விஸ்வநாதர் தம் திட்டத்தின் கீழ் இந்த கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது.