Lotus Eletre ஹைப்பர் எஸ்யூவியை அறிமுகம் செய்தது லோட்டஸ் நிறுவனம்

Thu, 31 Mar 2022-3:27 pm,

595km ரேஞ்ச் 257kmph மற்றும் டாப் ஸ்பீடு 600hp கொண்டது லோட்டஸ் எலெட்ரே எலக்ட்ரிக் எஸ்யூவி 

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, முழுமையாக சார்ஜ் செய்தால், 370 மைல்கள் அதாவது 595 கிலோமீட்டர் தூரம் பயணிக்கலாம்

நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் எஸ்யூவியின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160மைல் அதாவது மணிக்கு 257 கிலோமீட்டர் இருக்கும். மேலும், 0-60 மைல்கள் அதாவது மணிக்கு 0-96 கிலோமீட்டர் வேகத்தைப் பிடிக்க 2.90 வினாடிகள் மட்டுமே ஆகும் என்று நிறுவனம் கூறுகிறது.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம். முன்பதிவுக்கு £2,000 (சுமார் ரூ.1,98,686) செலுத்த வேண்டும். வாகங்களின் முதல் தொகுதி சீனா, இங்கிலாந்து மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய சந்தைகளில் வழங்கப்படும்.

இது புதிய 800 வோல்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 100kWh க்கும் அதிகமான திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது. பேட்டரி 20 நிமிட சார்ஜில் 248 மைல் தூரத்தை கடக்கும். இதன் இரண்டு மின் மோட்டார்கள் 600 ஹெச்பி ஆற்றலை உருவாக்குகின்றன. காரில் ஸ்பிலிட் ஸ்டைல் ​​ஹெட்லைட் உள்ளது. இந்த காரில் 15.1 இன்ச் HD இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link