ஆரஞ்சு தோலை தேய்த்தால் சருமம் பளபளக்குமா? பதிலை தெரிந்து கொள்வோம்!
ஆரஞ்சு தோலை அரைத்து முகத்தில் தடவுவதால் சருமம் பளபளப்பாகும் என பலர் சொல்லி கேட்டிருப்போம். இது உண்மைதானா? இங்கு பார்ப்போம்.
ஆரஞ்சு பழத்தில் மட்டுமன்றி, ஆரஞ்சு பழத்தின் தோலிலும் பல நன்மைகள் நிறைந்துள்ளது. இந்த தோலை, வீட்டை சுத்தப்படுத்தவும், சருமத்தை சுத்தப்படுத்தவும் கூட உபயோகிக்கலாம். அப்படி இதில் நிறைந்துள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று, சருமத்தை பளபளப்பாக்குவது.
ஆரஞ்சு பழ தோலை காயவைத்து அதை பொடியாக்கி தண்ணீர் கலந்து முகத்தில் தடவலாம். இது, முகத்தில் உள்ள இறந்து போன செல்களை நீக்க உதவும். இதனால், முகம் இயற்கையாகவே பளபளப்பாகும்.
ஆரஞ்சு பழ தோலை, வீட்டை சுத்தப்படுத்தும் இயற்கை திரவியமாகவும் உபயோகிக்கலாம். இந்த தோல்களில் இயற்கையாக வினிகரை கலந்து உபயோகிக்கலாம். எண்ணெய் பசை இருக்கும் இடங்களில் இதை வைத்து தேய்த்து சுத்தப்படுத்துவதால் சுத்தமாகி விடும்.
சிட்ரஸ் டீ என்பதை பலரும் கேள்வி பட்டிருக்க மாட்டோம். இதை செய்ய வெயிலில் காய வைத்த ஆரஞ்சு தோல்களை சேர்க்க வேண்டும். இதனால், எப்போதும் குடிக்கும் டீயிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.
ஆரஞ்சு தோல், இயற்கையான பூச்சுக்கொல்லியாகவும் விளங்குகிறது. ஆரஞ்சு பழ தோலை வீட்டின் நுழைவாயிலிலோ, தோட்டம் இருக்கும் பகுதியிலோ, அல்லது அதிகம் கொசு பரவும் இடங்களிலோ வைப்பதால் தேவையற்ற பூச்சிகள் வீட்டிற்குள் உலா வருவதை தவிர்க்கலாம்.
ஆரஞ்சு தோல் உடல் எடையை குறைக்கவும் வழி வகை செய்கிறது. இதில், மெட்டபாலிச சக்தி அதிகம் உள்ளதால் பசித்தன்மையை நீக்கி புரத சத்துக்களை உடலுக்கு அளிக்கிறது. இது, உடல் எடையை குறைக்க உதவும்.