Photo Gallery: கங்கனா ரனாவதின் வெளிவராத 6 திரைப்படங்கள் எவை தெரியுமா?
இந்த படத்திற்கு 'ஐ லவ் யூ பாஸ்' என்று பெயரிடப்பட்டது, இதில் அமிதாப் பச்சன் முதலாளியாக நடிக்கவிருந்தார். பிரபல தயாரிப்பாளர் இயக்குனர் பஹ்லாஜ் நிஹலானி இந்த படத்தை தயாரித்து வந்தார். பின்னர் அவர் தணிக்கை வாரியத்தின் தலைவரானார். கங்கனாவின் கவர்ச்சியான புகைப்படங்கள் இந்த திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டன. அதில் அவர் ஒரு ஹாலிவுட் திரைப்பட நடிகையைப் போல் காட்சியளித்தார். ஆனால் திரைப்படம் பாதியிலேயே நின்றுப் போனது...
கங்கனாவுக்கு மீண்டும் அமிதாப் பச்சனுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ராஜ்குமார் சந்தோஷி ஒரு மல்டிஸ்டாரர் திரைப்படத்திற்காக திட்டமிட்டபோது பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்க திட்டமிடப்பட்டது. அமிதாப்புடன் சஞ்சய் தத், அனில் கபூர் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோரை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார். கங்கனா மற்றும் அமிஷா படேலின் பெயர் மிகவும் ஆலோசிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில், 'பவர்' திரைப்படத்தின் பூஜை போடப்பட்டபோது, இந்த 4 முன்னணி ஹீரோக்கள் மட்டுமே அவர்களின் கெட்அப்பில் அழைக்கப்பட்டனர். கங்கனாவோ அல்லது அமிஷா படேலோ திரைப்பட பூஜையில் கலந்துக் கொள்ளவில்லை. ஆனால் சஞ்சய் தத்திற்கு நீதிமன்றம் தண்டனை அறிவித்ததால் இந்த திரைப்படம் நிறுத்தப்பட்டது என்றும் பல்வேறு கதைகள் வெளிவந்தன. தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே சில சட்ட மோதல்கள் இருப்பதாகவும் வதந்திகள் உலாவின....
ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரு தயாரித்த காதல் கலந்த நகைச்சுவை படம் இது. சன்னி தியோலின் முந்தைய பல படங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் திரைப்படம் வெளியிடுவது பலமுறை தள்ளிப்போடப்பட்டது. திரைப்படத்தின் ட்ரெய்லரும் வெளியானது. ஆனால், அதற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் திரைப்படம் வெளிவரவில்லை. பட வெளியீடு பற்றி கங்கனாவிடம் கேட்கப்பட்டபோது, எனக்கு பணம் கிடைத்துவிட்டது. திரைப்படம் வெளியாகததற்கான காரந்த்தை இப்போது தயாரிப்பாளரிடம் தான் கேட்கவேண்டும் என்று அவர் தெரிவித்துவிட்டார்.
தனது நிறுவனமான மணிகர்னிகா பிலிம்ஸில் தயாரிக்கும் முதல் படம் 'தேஜு' என்று கங்கனா ரனாவத் திட்டமிட்டிருந்தார். இதில் கங்கனா 80 வயதான பெண்மணியின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கதை எழுதப்பட்டிருந்தது. மரணத்தின் வாயில் நிற்கும் அந்த கதாபாத்திரம் இந்த உலகத்திலிருந்து செல்ல விரும்பவில்லை. முழு படப்பிடிப்பும் இமாச்சலில் நடைபெறும் என்றும், இந்த திரைப்படத்தில் இமாச்சலப்பிரதேசத்தின் கலாச்சாரம் காண்பிக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார். கதை மற்றும் இயக்கத்தை கங்கனாவே ஏற்றுக் கொள்ளவதாகவும் தகவல்கள் வெளியாகின. இவை அனைத்தும் 2017-18 ஆம் ஆண்டின் விஷயம், தனு வெட்ஸ் மனு மற்றும் சிம்ரன் தயாரிப்பாளர் ஷைலேஷ் சிங் ஆகியோருடன் கங்கனா இந்த படத்தை தயாரிக்கவிருந்தார். ஆனால் காலம் கைகொடுக்கவில்லை. தனது கனவுப் படமான ’தேஜு’வை நிச்சயம் 'எடுப்பேன் என்று கங்கனா இன்னும் நம்புகிறார்.
கரண் ஜோஹர் தயாரித்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படத்தை இதுவரை வெளியிடாததால் கரண் ஜோஹர் மீது கோபமாக இருக்கிறார் கங்கனா. இந்த படத்தின் பெயர் ஃபிங்கர், இதில் கங்கனாவுடன் சஞ்சய் தத், எம்ரான் ஹாஷ்மி, நேஹா துபியா மற்றும் ரன்தீப் ஹூடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2013 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி வெளியிடப்படவிருந்தது, இதற்காக கரண் தானே ட்வீட் செய்து தேதி கொடுத்தார். திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிலுவையில் உள்ளன என்பதே இதன் பொருள். ஆனால் ஏன் அதை வெளியிடவில்லை என்ற ரகசியத்தை கரண் ஜோஹர் ஒருபோதும் சொல்லவில்லை.
விகாஸ் பஹ்ல் இயக்கிய கங்கனாவின் குயின் திரைப்படம் மிகவும் பிரபலமானது. இந்தத் திரைப்படத்தை தமிழில் தயாரிக்க திட்டமிடப்பட்டது, பிரபல நடிகையும், இயக்குனருமான ரேவதி இந்த திரைப்படத்தை இயக்கினார். வசனங்களுக்கான பொறுப்பு சுஹாசினி மணிரத்தினம் ஏற்றுக் கொண்டார். கங்கனாவின் முக்கிய கதாபாத்திரத்தில் 'பாகுபலி' புகழ் தமன்னா பாட்டியா தேர்வு செய்யப்பட்டார். கங்கனாவுக்கு இந்த திரைப்படத்துடன் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை, ஆனால் இது தென்னிந்திய திரையுலகில் கங்கனாவின் வெற்றிப் படம் தமிழில் தயாரிப்பதால் கங்கனாவின் பெயர் முன்னிலையில் வருவது இயல்பான விஷயமாக இருந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 'குயின்' படத்தின் தமிழ் ரீமேக் எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டது.