ஒருவருக்கு உங்களை பிடிக்காததை காட்டும் 7 உடல் மொழிகள்!!
ஒருவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால், நீங்கள் பேசும் போது அவர் கை கட்டி இருப்பர். மேலும், நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே முகத்தை திருப்பிக்கொள்வர்.
உங்களுடன் கண் பார்த்தே பேச மாட்டார்கள். இது, அவர்களுக்கு உங்கள் மேல் நாட்டம் இல்லாததை காண்பிக்கிறது.
பேசிக்கொண்டிருக்கும் போதே நீங்கள் கூறும் விஷயங்களுக்கு கண்களை உருட்டுவர். நீங்கள் என்ன பேசினாலும் அவர்கள் இப்படி செய்வதை பார்த்தால் அவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லை என்று அர்த்தம்.
நீங்கள் அவர்களை பார்த்து பேசிக்கொண்டிருந்தால், அவர்கள் தனது செல்போனை பார்த்துக்கொண்டிருப்பார்கள். இப்படி ஒருவர் செய்தால், நீங்கள் பேசுவதிலோ அல்லது உங்கள் மீதோ அவருக்கு எந்த விருப்பமும் இல்லை என அர்த்தம்.
நீங்கள் ஒரு முக்கியமான விஷயங்களை சொல்லும் போது, உங்கள் வெற்றிகளை பகிர்ந்துகொள்ளும் போது அதை கேட்டு நக்கலாக சிரிப்பர்.
நீங்கள் எந்த ஜோக் கூறியிருந்தாலும், சிரிப்பூட்டும் விஷயத்தை பேசியிருந்தாலும் அவர்கள் சிரிப்பே வராமல் சிரிப்பார்.
ஒருவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால், நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அதை இடைநிறுத்த சொல்வார்கள்.