உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!
உடல் எடையை குறைக்க உதவும் சில தினசரி நடவடிக்கைகள். அவை என்னென்ன தெரியுமா?
முதலில், சர்க்கரை பானங்களை அரவே நீக்க வேண்டும். இதனால் நம் உடலில் உண்டாகும் கலோரிகளை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தையும் பேனலாம்.
மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களை சரி செய்ய வேண்டும். உடல் எடை அதிகரிக்க அதுவும் ஒரு காரணமாக அமைகிறது.
ஒரு நாளில், ஒரே இடத்தில் உட்காராமல், தொடர்ந்து உடலை ஆற்றலுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
7 முதல் 8 மணி நேரம் வரை நல்ல தூக்கம் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது தசைகள் வேலையற்ற நேரங்களில் சரியான ஓய்விற்குள்ளாகி, மீண்டும் நம் உடலுக்கு ஆற்றலை அளிக்கும்.
நாம் எடுத்துக்கொள்ளும் உணவை, பகுதிகளாக (Portion Control) பிரித்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் நம் உடலில் இருக்கும் கலோரிகளின் அளவு நமக்கு தெரியும்.
ஃபைபர் சத்துகளை நம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது அதீத பசி உணர்வை இது கட்டுப்படுத்தி, அதிகமாக சாப்பிடுவதில் இருந்து தவிர்க்க செய்யும்.
நாம் ஒரு நாளைக்கு, நம் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிப்பது மிகவும் முக்கியமாகும். அப்போதுதான் நாம் நினைக்கும் படி உடல் எடையை குறைக்க முடியும் என்பது மருத்துவர்களின் கருத்து.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)