நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!
தூக்கம்:
இரவில் 7 முதல் 8 மணி நேரம் நீங்கள் தூங்கியிருப்பது அவசியம். ரிலாக்ஸாக அவ்வளவு நேரம் உறங்கினால்தான் உங்களால் ஆக்டிவாக இருக்க முடியும்.
தண்ணீர் குடிப்பது:
காலையில் எழுந்தவுடன், முதல் வேலையாக ஓரு டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். இது, உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்குமாம்.
காலை உடற்பயிற்சிகள்:
உங்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, மனநிலையை மேம்படுத்த காலையில் உடற்பயிற்சி செய்யலாம். அது, 5-10 நிமிடங்கள் வரை இருந்தால்கூட போதுமானது.
காலை உணவு:
காலையில் சாப்பிடும் முதல் உணவு, உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக இருக்க வேண்டும். முட்டை, பழங்கள், ஓட்ஸ் ஆகியவை உங்கள் உடலுக்கு ஆற்றல் அதிகரிக்கிறது.
சூர்ய ஒளி:
காலை வெயிலில் நிற்பது, உடலுக்கு கதகதப்பை கொடுத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். அது மட்டுமன்றி உங்களை விழிப்புடன் செயல்படவும் வைக்குமாம்.
கஃபைன் பானங்கள்:
கஃபைன் பானங்களை அடிக்கடி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இது, உங்கள் உடலில் தேவையற்ற மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
மனநிறைவு கொள்ளுதல்:
இப்போது உங்கள் வாழ்வில் உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் கிடைத்திருக்கிறதோ, அதை நினைத்து மனநிறைவு கொள்ள வேண்டும். அதை தியானத்தின் வழியாக செய்யலாம். இது, உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி உணர்வை கொடுத்து அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.