இருண்ட வாழ்வில் ஒளி வீச உதவும் 7 புத்தகங்கள்! கண்டிப்பா படிங்க..

Fri, 22 Nov 2024-11:15 am,

The Book of Joy புத்தகம், தலாய் லாமா மற்றும் டெஸ்மௌண்ட் ஆகிய இரு பெரிய ஆன்மிக குருக்களுக்கு இடையேயான புத்தகம் ஆகும். வாழ்வில் என்ன கடினமான தருணங்கள் வந்தாலும், அதை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வது எப்படி என்று இந்த புத்தகம் கூறுகிறது. 

Tuesdays with Morrie புத்தகத்தை மிட்ச் ஆல்பாம் என்பவர் எழுதியிருக்கிறார். இவர், நோய் வாய்ப்பட்டு படுக்கையான போதிலும், வாழ்வில் மகிழ்ச்சி, வேலை, குடும்பம் என அனைத்தையும் கண்டவர். இந்த புத்தகம் அவர் வாழ்க்கையை கூறுவதாக இருக்கிறது. 

The Four Agreements புத்தகம், டான் மிகல் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்வில் நாம் நான்கு கோட்பாடுகளுடன் வாழ வேண்டும். அப்போது நமக்கே தெரியாமல் மகிழ்ச்சி பீரிட்டு அடிக்கும் என்பதை காட்டுகிறது இந்த புத்தகம்.

Ikigai உலகளவில் பிரபலமான ஜப்பானிய மொழி புத்தகம். தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் இது மொழிப்பெயர்க்கப்பட்டிருகிறது. வாழ்வின் அர்த்தம், மகிழ்ச்சியை கண்டுபிடிக்க வழி என தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்களை கூறுகிறது இந்த புத்தகம்.

 

The Power of Now புத்தகம், நடந்ததை நினைத்து கவலை கொள்ளாமல், நடக்க இருப்பதை நினைத்து வருந்தாமல், இப்போது இந்த நிமிடம் நம்மை சுற்றி இருப்பதை வைத்து எப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை எடுத்துரைக்கிறது. 

Man's Search for Meaning புத்தகத்தை விக்டர் ஃப்ரான்கில் என்பவர் எழுதியிருக்கிறார். நாசி போரின் போது, மிகவும் கொடிய காலத்தில் இருந்தபோதிலும் தன் வாழ்வின் அர்த்தத்தை கண்டுபிடித்தது எப்படி என்பதை இப்புத்தகத்தின் மூலம் அவர் எடுத்துரைக்கிறார். 

The Alchemist புத்தகத்தை Paulo Coelho எழுதியிருக்கிறார். நம் மனதின் பேச்சை கேட்டு நடப்பது, மன உறுதியை வளர்த்துக்கொள்வது குறித்து இந்த புத்தகம் பேசுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link