தோல்வியை விரட்டி ஓட வைக்கும் 7 பழக்கங்கள்!! தினமும் பண்ணுங்க..
காலையில் சீக்கிரம் எழுவது, உங்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும். இதனால் நீங்கள் உங்கள் நாளை ரிலாக்ஸ் ஆக தொடங்குவதுடன், உங்கள் வேலைகளை சீக்கிரமாக முடிக்கவும் முடியும்.
தினமும், உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களை நினைத்து நன்றியறிய வேண்டும். இதனால் வாழ்வில் என்ன நடந்தாலும் அதனை பாசிடிவாக பார்க்க தோன்றும்.
தினசரி என்னென்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இது, நீங்கள் சரியான இலக்குகளை நிர்ணயிக்கவும் உதவும்.
தினமும் 20 முதல் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உங்களை மனதளவிலும் உடல் அளவிலும் திடமாக வைத்துக்கொள்ள உதவும்.
தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது, உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். இதனால் உடல் நலம் நன்றாக இருக்கும்.
தினசரி ஏதேனும் ஒரு விஷயத்தை புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது உங்கள் மூளை எப்போதும் ஆக்டிவாக இருக்கும்.
தினமும் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். அப்போது உங்கள் தூக்கம் மேம்படுவதுடன் பயணுள்ள நேரமாகவும் அதனை மாற்றியமைக்கலாம்.