Phone தண்ணீரில் விழுந்துவிட்டால் உடனே இந்த 7 விஷயங்களை செய்யுங்கள்!
போன், தண்ணீரில் விழுந்தவுடன் எடுத்து விட வேண்டும். மிக நீண்ட நேரம் போன் தண்ணீரில் மூழ்கியிருந்தால் அது கண்டிப்பாக பாழாகி விடும்.
தண்ணீரில் இருந்து போனை எடுத்தவுடன், உடனடியாக போனை ஆஃப் செய்து விடுங்கள். வேறு எந்த பட்டனையும் அழுத்த வேண்டாம்.
போனில் இருந்து பேட்டரி, சிம்கார்ட், SD கார்ட் ஆகியவற்றை உடனடியாக கழற்றவும். அப்போது, அந்த பொருட்கள் பாழாகாமல் இருக்கும்.
ஒரு லைனின் துணியை எடுத்து, போனின் உட்புறத்தில் முழுவதுமாக துடைக்க வேண்டும். ஸ்பீக்கர், பவர் பட்டன் என அனைத்து இடங்களையும் துடைக்க வேண்டும்.
ஹேர் ட்ரையர் உதவியுடன் போனை நன்றாக காய வைக்க வேண்டும். அல்லது நன்கு வெயில் அடிக்கும் போது அதிலும் காய வைக்கலாம்.
Silica Gel பேக்கெட்டுகளில், போனை போட்டு வைக்கலாம். அப்படி இல்லை என்றால், அரிசியில் வைக்கலாம்.
போன் நன்றாக உலர்ந்த பிறகு, ஆன் செய்து சரியாக இயங்குகிறதா என பார்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால், இதில் கை தேர்ந்தவரிடத்தில் போனை கொடுத்து சரி பார்க்கலாம்.
எதற்கும் முன்னெச்சரிக்கையக உங்கள் போனில் இருக்கும் டேட்டாக்களை வேறு போனில் அல்லது லேப்டாப்பில் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.