மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் மற்றொரு பரிசு: அதிகரிக்கும் அடிப்படை ஊதியம்

Thu, 21 Nov 2024-1:39 pm,

மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாதம் 16 ஆம்  தேதி அகவிலைப்படி அதிகரிப்புக்கான செய்தி வந்தது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி  மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 3% அதிகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து டிஏ மற்றும் டிஆர் தற்போது 53% ஆக உயர்ந்துள்ளது.

 

இப்போது அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு பரிசை கொடுக்க உள்ளது. அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

அடிப்படை ஊதியத்தை உயர்த்த 8வது ஊதியக்குழுவை அமைப்பது அவசியம். நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களும் ஊதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவிற்காக பல நாட்களாக காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்தால் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். இது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். இதன் காரணமாக அவர்களது ஊதிய அமைப்பு முழுதும் ஏற்றும் காணும். இதனால் இன்னும் பிற அலவன்சுகளிலும் மாற்றம் காணப்படும்.

 

சம்பள திருத்தத்திற்கு அடிப்படையாக கருதப்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை மாற்ற வேண்டும் என்று ஊழியர்கள் சார்பில் கோரிக்கை வலித்து வருகின்றது. பிட்மெண்ட் ஃபாக்டரை 2.86 மடங்காக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. இந்த கோரிக்கைக்கு ஏற்ப பிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து ரூ.51,451 ரூபாயாக அதிகரிக்கும்.

சம்பளம் மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) ஓய்வூதியத்திலும் பெரிய ஏற்றம் இருக்கும். இதன் மூலம் லட்சக்ணக்கான ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயம் செய்யப்பட்டால், ஓய்வூதியம் தற்போதுள்ள ரூ.9,000 -லிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்கும்.

'தற்போது பணவீக்கம் உச்சத்தில் உள்ளது.  விலைவாசி விண்ணை எட்டியுள்லது. இதைக் கருத்தில் கொண்டு, ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.86 ஆக உயர்த்த வேண்டும் என்று எங்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்' என்று என்சி-ஜேசிஎம் செயலர் ஷிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்தார். 

ஒவ்வொரு ஊதியக் குழுவிலும், சம்பளத்தை திருத்துவதற்கான அடிப்படையாக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பொறுத்தது தான் சம்பள உயர்வு தீர்மானிக்கபப்டுகின்றது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியத் திருத்தத்தின் ஒரு குணகமாகும்.

7வது ஊதியக் குழுவில், 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கேற்ப அப்போது அடிப்படை ஊதியமும் பிற அலவன்சுகளும் தீர்மானிக்கப்பட்டன. இப்போது அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க அரசு இதை மீண்டும் மாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வரவேண்டும். இப்பொழுது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் தான் அது சாத்தியப்படும். இதற்கான ஆயத்தப்பணிகளை அரசாங்கம் செய்து வருவதாகவும் பட்ஜெட் 2025 -இல் இது அமலுக்கு வரும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link