மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அதிரடி டிஏ ஹைக்... AICPI எண்கள் மூலம் வந்த நல்ல செய்தி
மத்திய அரசு ஊழியர்கள் காத்திருந்த தகவல் வெளிவந்துவிட்டது. ஜூலை 2024 முதலான அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த முக்கியமான ஒரு அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜூலை 2024 முதலான டிஏ ஹைக் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 2024க்கான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதன் நேரடி பலனைப் பெறுவார்கள்.
ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு தற்போது மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) 50% ஆக உள்ளது. தற்போது ஜூலையில் மீண்டும் அகவிலைப்படியில் திருத்தம் செய்யப்படும். ஏஐசிபிஐ குறியீட்டில் 1.5 புள்ளிகள் என்ற பெரிய அளவில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அகவிலைப்படி மதிப்பெண்ணிலும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
AICPI-IW குறியீட்டின் எண்ணிக்கையிலிருந்து, ஜூலை 2024 முதல் பணியாளர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி வழங்கப்படும் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தின் எண்கள் வெளியாகியுள்ளன. ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீட்டில் 1.5 புள்ளிகள் என்ற பெரிய ஏற்றம் காணப்பட்டுள்ளது. மே மாதத்தில் 139.9 புள்ளிகளாக இருந்தது, தற்போது 141.4 ஆக அதிகரித்துள்ளது.
ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் அகவிலைப்படியின் மதிப்பெண் 53.36 ஆக அதிகரித்துள்ளது. அதாவது இம்முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கப்படும். ஜனவரியில், குறியீட்டு எண் 138.9 புள்ளிகளாக இருந்தது, இதன் காரணமாக அகவிலைப்படி 50.84 சதவீதமாக அதிகரித்தது.
2024 ஜனவரி முதல் ஜூன் 2024 வரையிலான CPI(IW) எண்கள் மற்றும் அகவிலைப்படி சதவிகிதத்தை இங்கே காணலாம்.
ஜூன் 2024 இல் ஆண்டு அடிப்படையில் பணவீக்கத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது, ஜூன் 2023 இல் 5.57% ஆக இருந்த பணவீக்க விகிதம் ஜூன் 2024 இல் 3.67% ஆக இருந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் அறிவிக்கப்படும். ஆனால், 2024 ஜூலையில் இருந்து இது அமல்படுத்தப்படும். இடைப்பட்ட மாதங்களுக்கான டிஏ உயர்வின் அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும்.
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2024 ஜனவரி முதல் ஜூன் வரையிலான AICPI எண்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூன் மாத அகவிலைப்படி உயர்வைத் தீர்மானிக்கும். ஏஐசிபிஐ தரவுகளின் படி அகவிலைப்படி 53.36 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆகையால் ஜூலை மாதம் அகவிலைப்படி 3% அதிகரித்து மொத்த டிஏ (2DA) 53% ஐ எட்டும் என்பது தெளிவாகியுள்ளது.
இதற்கிடையில் அகவிலைப்படி 50% -ஐத் தாண்டினால், அது பூஜ்ஜியம் ஆகுமா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. எனினும் இது தொடர்பாக நிலையான விதி எதுவும் இல்லை. அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை தானாக இணைப்பது குறித்த நிலையான குறிப்பு எதுவும் இல்லாததால், டிஏ மற்றும் டிஆர் (DR) -இன் அடுத்த தவணை 'பூஜ்ஜியத்தில்' தொடங்காது என்றும் 50 சதவிகிதத்தைத் தாண்டி வழக்கமான முறையில் தொடரும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசியாக அடிப்படை ஆண்டு மாற்றப்பட்ட போது இது செய்யப்பட்டது. அடிப்படை ஆண்டை மாற்றுவது இனி தேவையில்லை. இதன் காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியும் 50 சதவீதத்தை தாண்டிச் செல்லும்.
ஜூலை 2024 -இல் அகவிலைப்படி (Dearness Allowance) 3% அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு இருக்கும். இது பணவீக்கம் மற்றும் விலைவாசியால் அவதியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.