7th Pay Commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, 4% டிஏ உயர்வால் ஊதியத்தில் ஏற்றம்
தமிழக அமுதல்வர் மு.க. ஸ்டாலின், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் கூடுதல் டிஏ வழங்கப்படும்.
இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இனி மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34-க்கு பதில் 38 சதவீதம் வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என தமிழக முதலர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனுடன், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களும் மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.
மாநில அரசின் இந்த நடவடிக்கையால், அரசு கருவூலத்துக்கு ரூ.2,359 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அகவிலைப்படி உயர்வை புத்தாண்டு பரிசு என்று குறிப்பிட்ட முதல்வர், மக்களின் நலன் மற்றும் செழிப்புக்கான அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய அரசும் விரைவில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தவுள்ளது. ஜனவரி மாதத்திலேயே ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவிப்பை வெளியிடக்கூடும். அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.