7th Pay Commission பம்பர் செய்தி: வேரியபல் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய முக்கிய தகவல்கள்
)
மத்திய துறையில் திட்டமிடப்பட்ட வேலைவாய்ப்புக்காக நிர்ணயிக்கப்பட்ட விகிதங்கள் மத்திய அரசு, ரயில்வே நிர்வாகம், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், முக்கிய துறைமுகங்கள் மற்றும் மத்திய அரசால் நிறுவப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் அரசாங்கம் கூறியது. இந்த விகிதங்கள் ஒப்பந்த மற்றும் சாதாரண ஊழியர்கள் / தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.
)
வேரியபல் கொடுப்பனவின் விகிதங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தம் ஏப்ரல் 1, 2021 முதல் கணக்கிடப்படும் என தொழிலாளர் அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. "தொழில்துறை பணியகத்தால் தொகுக்கப்பட்ட விலைக் குறியீடான தொழில்துறை தொழிலாளர்களுக்கான சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் (CPI-IW) வேரியபல் அகவிலைப்படி (VDA) திருத்தப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் 2020 வரையிலான சராசரி CPI-IW சமீபத்திய VDA திருத்தத்தை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது " என அமைச்சகத்தின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
)
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறுகையில், “இது நாடு முழுவதும் மத்திய துறையில் பல்வேறு திட்டமிடப்பட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 1.50 கோடி தொழிலாளர்களுக்கு பயனளிக்கும். VDA-வின் இந்த உயர்வு இந்த தொழிலாளர்களுக்கு, குறிப்பாக தற்போதைய தொற்றுநோய் காலங்களில் ஆதரவாக இருக்கும்" என்றார்.
மத்திய துறையில் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை அமல்படுத்துவது, மத்திய துறையில் திட்டமிடப்பட்ட வேலையில் ஈடுபடும் ஊழியர்களுக்காக, நாடு முழுவதும் உள்ள தலைமை தொழிலாளர் ஆணையரின் (மத்திய) ஆய்வு அதிகாரிகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இந்த திருத்தத்தின் மூலம் கோடிக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது.