மீண்டும் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் டிஏ ஹைக், ஊதிய உயர்வு
7வது ஊதியக் குழு: சுமார் ஒரு கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. புதிய ஆண்டில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப் போகிறது. ஜனவரி 2025 -இல் அகவிலைப்படி எவளவு அதிகரிக்கும்? சம்பளம் எவ்வளவு உயரும்? இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. இதன் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நிதி பலனைப் பெறுவார்கள். இந்த உயர்வு 7வது ஊதியக்குழுவின் கீழ் செய்யப்படும்.
தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளின் படி பார்த்தால், AICPI இன்டெக்ஸ் 141.5 ஐ எட்டியுள்ளது. மேலும் அகவிலைப்படி மதிப்பெண் 54.49% ஐ எட்டியுள்ளது. இருப்பினும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இதற்குப் பிறகுதான டிஏ உயர்வு குறித்து முடிவு செய்யப்படும். டிசம்பர் 2024க்குள் குறியீட்டு எண் 144-145 புள்ளிகளை அடைந்து, DA மதிப்பெண் 55% க்கும் அதிகமாக இருந்தால், டிஏ -வில் 3 சதவீதம் அதிகரிப்பு இருக்கும். ஆனால், இறுதி முடிவை மத்திய அரசுதான் எடுக்கும்.
உண்மையில், மத்திய அரசு மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) ஆண்டுக்கு இரண்டு முறை திருத்துகிறது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. இந்த அதிகரிப்பு ஜனவரி/ஜூலை முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 3% உயர்ந்தது. அதன் அடிபப்டையில் தற்போடு டிஏ மற்றும் டிஆர் 53% ஆக உள்ளன.
முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிபப்டையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.
அந்த வகையில், ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படும். இதுவரையிலான தரவுகளைப் பார்த்தால், புதிய ஆண்டில் டிஏ மீண்டும் 3% அதிகரிக்கலாம் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2025 -இல் வரக்கூடும்.
சம்பள உயர்வு: ஊழியர்களின் அடிப்படை ஊதியம் (Basic Salary) ரூ.18,000 ஆகவும், அகவிலைப்படி 56% ஆகவும் இருந்தால், கணக்கீடு இப்படி இருக்கும்: ஜனவரி 2025 முதலான டிஏ: ரூ.18,000 x 56% = ரூ.10,080/மாதம் / ஜூலை 2024 வரையிலான டிஏ: ரூ.18,000 x 53% = ரூ.9,540/மாதம். 3% அதிகரிப்புக்குப் பிறகு சம்பளத்தில் காணப்படக்கூடிய மாற்றம் - மாதத்திற்கு ரூ.540.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ மற்றும் டிஆர் வழங்கப்படுகின்றன. இது ஊழியர்களின் ஊதியத்தில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA% = [(கடந்த 12 மாதங்களில் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 115.76)/115.76] x 100. பொதுத்துறை ஊழியர்களுக்கு DA% = [(கடந்த 3 மாதங்களில் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33)/126.33] x 100
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.