7 வது ஊதியக்குழு: 14.82 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்திற்கு சமமான தீபாவளி போனஸ்
போனஸ் தொகையாக ரூ .6908 அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 75 சதவீதம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (ஜி.பி.எஃப்) கணக்கிற்கும், 25 சதவீதம் ரூ .1727 ரொக்கமாக செலுத்தப்படும். இதற்கு அரசு கருவூலத்தில் 1022.75 கோடி செலவாகும்.
கொரோனா வைரஸ் (Coronavirus)காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தத்தால், இந்த முறை தீபாவளிக்கு போனஸ் பெறுவது குறித்து ஊழியர்களிடையே ஒரு குழப்பம் நிலவிவந்தது. ஆனால், முதலமைச்சரின் போனஸ் அறிவிப்புக்குப் பின்னர், அரசு ஊழியர்களின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அனைத்து non-gazetted அரசு ஊழியர்கள், அரசுத் துறைகளின் பணியில் இருக்கும் மாநில ஊழியர்கள், அரசு நிதியுதவி பெற்ற கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் தினசரி ஊதியம் பெறுபவர்கள் என அனைவரும் தீபாவளிக்கு போனஸ் பெறுவார்கள்.
கடந்த ஆண்டைப் போலவே, போனஸ் தொகையில் 75 சதவீதம் ஜி.பி.எஃப் (GPF) கணக்கில் டெபாசிட் செய்யப்படும். 25 சதவீதம் ரொக்கமாக வழங்கப்படும். பணியாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் அந்த தொகைக்கு பதிலாக என்.எஸ்.சி (NSC) பெறுவார்கள் அல்லது அந்த தொகை பிபிஎஃப் (PPF) கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
மார்ச் 31, 2020 க்குப் பிறகு ஓய்வு பெற்ற அல்லது 2021 ஏப்ரல் 30 க்குள் ஓய்வு பெறவிருக்கும் ஊழியர்களுக்கு போனஸ் ரொக்கமாக செலுத்தப்படும்.