ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு எப்படி கணக்கிடப்படுகிறது?
அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
ஒரு ஆண்டில் இரண்டு முறையை என ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் டிஏ மற்றும் டிஆர் கணக்கிடப்படுகிறது, கடந்த மார்ச்சில் அரசு 3% அகவிலைப்படியை உயர்த்தியது.
ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் ஊழியரின் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது . உதாரணமாக ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக இருந்தால் டிஏ உயர்வுக்கு பிறகு மொத்த சம்பளத்தில் ரூ.7200 அகவிலைப்படி வழங்கப்படும்.
இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற மூன்று நாடுகள் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்குகிறது.