மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: பூஜ்ஜியம் ஆகிறதா அகவிலைப்படி? டிஏ ஹைக் எவ்வளவு?

Sat, 03 Aug 2024-10:22 am,

மத்திய அரசு ஊழியர்கள் இன்னும் சில நாட்களில் டிஏ உயர்வு பற்றிய அறிவிப்பை பெறவுள்ளனர். ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வெளியாகும் என தெரிகிறது. இதற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

 

இதற்கிடையில் மற்றொரு சந்தேகமும் ஊழியர்களிடம் வலுத்து வருகிறது. அகவிலைப்படி (Dearness Allowance) 50% -ஐத் தாண்டியவுடன் அது பூஜ்ஜியமாக குறையுமா என்ற பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி 50% ஆக உள்ளது. ஜூலை முதல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப்பட்டாலும், அது 50% -ஐத் தாண்டும். இந்த நிலையில் இது குறித்த பேச்சு தற்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. 

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டும் 50 சதவீதத்தை எட்டியவுடன் அவற்றின் தொகை அடிப்படை ஊதியத்துடன் (Basic Salary) இணைக்கப்பட்டு, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் பூஜ்ஜியம் ஆக்கப்படும் முறை முன்னர் இருந்ததால், இது குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. எனினும், இப்படித்தான் செய்ய வேண்டும் என 7வது ஊதியக்குழுவின் கீழ் எந்த கட்டாயமும் இல்லை என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். 

7வது ஊதியக் குழுவின் கீழ் எந்த நிலையிலும் அடிப்படை ஊதியத்துடன் டிஏ -வை (DA) இணைக்க எந்த பரிந்துரையும் இல்லை என்பதை பிசினஸ் லைன் அறிக்கை ஒன்று சில மாதங்களுக்கு முன்பு உறுதிப்படுத்தியது. அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை தானாக இணைப்பது குறித்த நிலையான குறிப்பு எதுவும் இல்லாததால், டிஏ மற்றும் டிஆர் (DR) -இன் அடுத்த தவணை 'பூஜ்ஜியத்தில்' தொடங்காது என்றும் 50 சதவிகிதத்தைத் தாண்டி வழக்கமான முறையில் தொடரும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வீட்டு வாடகை கொடுப்பனவில் (House Rent Allowance) திருத்தம் செய்யப்பட்டதால் டிஏ பூஜ்ஜியமாகக் குறைவது குறித்த விவாதம் பரவலாக தொடங்கியது. 7வது ஊதியக்குழு அகவிலைப்படியை ஒருங்கிணைக்கும் செயல்முறையை உருவாக்கியது. இருப்பினும், இது அப்படியே பின்பற்றப்படும் என்று ஒரு விதி இல்லை. அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது HRA மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அப்போது, ​​அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதற்கான பிரத்யேக விதி எதுவும் இல்லாததால், ஊழியர்களின் அகவிலைப்படி பூஜ்ஜியமாகாது என்றும்,  டிஏ உயர்வு (DA Hike) கணக்கீடு தொடரும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். கடைசியாக அடிப்படை ஆண்டு மாற்றப்பட்ட போது இது செய்யப்பட்டது. அடிப்படை ஆண்டை மாற்றுவது இனி தேவையில்லை. இதன் காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியும் 50 சதவீதத்தை தாண்டிச் செல்லும். 

ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் டிஏ உயர்வு (DA Hike) தீர்மானிக்கப்படுகின்றது. ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி திருத்தப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் கணக்கிடப்படுகின்றன. இதுவரை ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எண்கள் வந்துள்ளன. 

ஜனவரியில், ஏஐசிபிஐ குறியீட்டு எண் 138.9 புள்ளிகளாக இருந்தது, இதன் காரணமாக அகவிலைப்படி 50.84 சதவீதமாக அதிகரித்தது. அதன் பின்னர் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் பிப்ரவரியில் 139.2 புள்ளிகளாகவும், மார்ச் மாதத்தில் 138.9 புள்ளிகளாகவும், ஏப்ரலில் 139.4 புள்ளிகளாகவும், மே மாதத்தில் 139.9 புள்ளிகளாகவும் இருந்தன. இதன் அடிப்படையில், அகவிலைப்படி ஏப்ரல் மாதத்தில் 51.44 சதவீதம், 51.95 சதவீதம், 52.43 சதவீதம் மற்றும் மே மாதத்தில் 52.91 சதவீதம் என உயர்ந்துள்ளது.

ஜூன் மாதத்தில் குறியீடு 0.7 புள்ளிகள் அதிகரித்தாலும், அது 53.29 சதவீதத்தைதான் எட்டும். 4 சதவிகிதம் அதிகரிப்பதற்கு, குறியீட்டெண் 143 புள்ளிகளை அடைய வேண்டும். இது சாத்தியமில்லை என தோன்றுவதால், அகவிலைப்படி ஜூன் 2024 -இல் 3% மட்டுமே உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது நடந்தால், ஊழியர்களின் டிஏ 53 சதவீதமாக உயரும். இதற்கான அறிவிப்பு இந்த மாதம் அல்லது செப்டம்பரில் வெளியாகும் என கூறப்படுகின்றது. இதன் பிறகு ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு இருக்கும் என எதிர்பார்ரக்கப்பௌகின்றது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link