இனி ஊதியக்குழுவே இல்லை, வருகிறது புதிய சூத்திரம்: அரசு ஊழியர்களுக்கு அதிகமாகும் நன்மைகள்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல முக்கிய செய்திகள் காத்திருகின்றன. இவற்றில் ஊதியக்குழுக்கள் பற்றிய அப்டேட்களும் அடங்கும். கடந்த சில வாரங்களாக புதிய ஊதியக்குழு பற்றியும் அதற்கான மாற்று வழிமுறை பற்றியும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
இதுவரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழுவை அமைப்பது வழக்கமாக உள்ளது. எனினும், அந்த முறை இப்போது மாறக்கூடும் என கூறப்படுகின்றது. இது ஒரு குழப்பமான சூழலை உருவாக்கியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக் குழுவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் தற்போது புதிய ஊதியக் குழுவுக்குப் பதிலாக, மற்றொரு சிறப்பு ஃபார்முலாவின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேறு சில முறைகள் அமல்படுத்தப்படும் எனத் தெரிய வந்துள்ளது.
தற்போது, ஃபிட்மென்ட் ஃபாக்டரை அடிப்படையாகக் கொண்டு அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு சம்பளம் உயர்த்தப்படுகிறது. ஆனால், இனி அது மாறும் என தெரிகிறது. இந்த புதிய ஃபார்முலாவும் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்த புதிய ஃபார்முலா பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
7வது ஊதியக் குழு அமலுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து ஊழியர்களுக்கு ஒரு நிம்மதியான செய்தி வரக்கூடும் என கருதப்படுகின்றது. புதிய சம்பள கமிஷனுக்கு பதிலாக, ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க புதிய ஃபார்முலாவும் தயாரிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
புதிய சூத்திரத்தின் அடிப்படையில், சம்பளத்தில் திருத்தம் மற்றும் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்கலாம். இதனுடன், தனியார் துறை நிறுவனங்களை போல ஒவ்வொரு ஆண்டும் அடிப்படை சம்பளத்தை உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு 2016ல் அமல்படுத்தியது. இப்போது மத்திய ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிக்க புதிய ஃபார்முலாவை அரசு அமல்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. இனி இந்த புதிய ஃபார்முலாவின் அடிப்படையில் மத்திய ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்.
தற்போது அக்ரோயிட் ஃபார்முலாவை (Aykryod Formula) அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று நிபுணர்கள் மற்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஃபார்முலா மூலம் பணியாளர்கள் கணிசமான அளவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ஃபிட்மென்ட் காரணி (8வது ஊதியக் குழுவில் உள்ள பொருத்தம் காரணி) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் சமமான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
தற்போதும் தர ஊதியத்திற்கு ஏற்ப சம்பளம் உயர்த்தப்படும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், புதிய ஃபார்முலா அமலுக்கு வந்த பிறகு ஊதியம் உயர்த்தப்படும் அளவு அதிகரிக்கலாம். அரசுத் துறைகளில் தற்போது 14 பே கிரேடுகள் (Pay Grade) உள்ளன. ஊழியர் முதல் அதிகாரி வரை அனைவரும் அனைத்து பே கிரேடுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது சம்பளத்தில் பெரிய மாற்றம் இருப்பதில்லை. புதிய ஃபார்முலா மூலம் அனைத்து பணியாளர்களுக்கும் சமமான பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
7வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்ட நேரத்திலேயே, நீதிபதி மாத்தூர், சம்பள கட்டமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகவும், சம்பள கமிஷனுக்கு பதிலாக புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டினார். அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, புதிய சூத்திரத்தின் மூலம் ஊழியர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்க முடியும் என அவர் கூறினார். அய்க்ரியோட் ஃபார்முலாவை அரசாங்கம் அமல்படுத்தக்கூடும். இதன் காரணமாக ஊழியர்களுக்கு அதிக அளவிலான பலன்கள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.