உங்கள் வாழ்வை மாற்றும் சக்தி படைத்த 8 கதை புத்தகங்கள்! அனைத்தும் அருமையானவை..
To Kill A Mocking Bird :
இந்த புத்தகத்தை ஹார்பர் லீ என்பவர் இயக்கியிருக்கிறார். இது, வாழ்வில் நமக்கு புரிதல், மனிதத்துவம், சமூக நீதி ஆகியவற்றை கற்றுக்கொடுக்கும் புத்தகமாக இருக்கிறது.
The Prophet :
இந்த புத்தகத்தை கலில் ஜிப்ரான் இயக்கியிருக்கிறார். இந்த புத்தகம், ஒரு அனுபவ கதை புத்தகமாகும். காதல், வேலை போன்ற சாதாரண அனுபவங்களை அற்புதமாக காண்பித்திருக்கும் புத்தகம் இது.
The Little Prince :
இந்த புத்தகத்தை Antoine de என்பவர் எழுதியிருக்கிறார். இது ஒரு தத்துவ கதை புத்தகம் ஆகும். சிறு வயதிலேயே இளவரசன் ஆகும் ஒரு சிறுவன் அன்பு, நட்பு, வாழ்க்கையை பற்றி கற்றுக்கொள்ளும் கதைதான் இந்த புத்தகம்.
The Book Thief :
இந்த புத்தகத்தை மார்க் சுசாக் என்பவர் எழுதியிருக்கிறார். இரண்டாம் உலகப்போர், அந்த சமயத்தில் ஒரு காதல் வாழ்க்கையில் எப்படி விளையாடியது என்பதை வைத்து இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது.
The Alchemist :
இந்த புத்தகத்தை Paulo Coelho எழுதியிருக்கிறார். நம் இதயத்தின் பேச்சை கேட்பது மூலமாக வாழ்வில் எந்த மாதிரியான உயரங்களை அடையலாம் என்பதை கற்றுக்கொள்ள, இப்புத்தகத்தை படிக்கலாம்.
Siddhartha : இந்த புத்தகத்தை ஹெர்மான் என்பவர் எழுதியிருக்கிறார். புத்தர், தனது அடையாளத்தை எப்படி கண்டுகொண்டார் என்பதை வைத்து இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
Life Of Pi:
இந்த புத்தகத்தை யான் மார்டெல் எழுதியுள்ளார். நம்பிக்கை, ஆன்மீகம் போன்ற விஷயங்களை பற்றி பேசும் புத்தகம் இது. இதனை படமாகவும் எடுத்திருக்கின்றனர்.
A Man Called Ove:
இந்த புத்தகத்தை, ஃப்ரெடிக் பேக்மேன் என்பவர் எழுதியிருக்கிறார். வாழ்வில் அனைவரிடமும் கடுமையாக நடந்துகொள்ளும் ஒருவர், எதிர்பாராமல் சந்திக்கும் சில நபர்கள் மூலம் வாழ்வில் பலர் நல்ல பாடங்களை கற்கிறார். இதுதான் இந்த புத்தகத்தின் கதை.