சுய ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் 8 புத்தகங்கள்! கண்டிப்பா படிங்க..

Mon, 23 Sep 2024-1:15 pm,

Willpower: Rediscovering the Greatest Human Strength:

மன உறுதியை எப்படி மேன்மை படுத்த வேண்டும் என்பது குறித்தும், இதற்கான முக்கியத்துவம் குறித்தும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை, Roy F. Baumeister and John Tierney ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.

The Power of Habit:

தி பவர் ஆஃப் ஹேபிட் புத்தகத்தை, சார்லஸ் டாஹிக் எழுதியிருக்கிறார். நமது பழக்க வழக்கங்கள் எப்படி நம்மை தொழில்ரீதியாகவும் தனிப்பட்ட மனிதராகவும் மாற்றுகிறது என்பதை இந்த புத்தகத்தில் விளக்கியிருப்பர். 

The Compound Effect:

தி காம்பவுண்ட் எஃபெக்ட் புத்தகத்தை, டேரன் ஹார்டி எழுதியிருக்கிறார். நம் வாழ்வில் எடுக்கும் சிறிய முயற்சிகள் எப்படி நம்மை பெரிய வெற்றி பாதைக்கு அழைத்து செல்கின்றன என்பதை இந்த புத்தகத்தில் விளக்கியிருக்கின்றனர்.

Mindset: The New Psychology of Success

இந்த புத்தகத்தை கேரோல் எஸ்.ட்வெக் எழுதியிருக்கிறார். நமது மனநிலையை வளர்ச்சி பெற செய்வதற்கு சுய ஒழுக்கம் எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த புத்தகத்தில் கூறியிருக்கின்றனர்.

The 7 Habits of Highly Effective People:

உலகளவில் அதிகம் விற்கப்படும் சிறந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. இந்த புத்தகத்தை ஸ்டீஃபன் ஆர்.கவி எழுதியிருக்கிறார். வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு, எந்த மாதிரியான 7 வாழ்வியல் மாற்றங்கள் உதவுகிறது என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது. 

Eat That Frog!

பிரையன் ட்ரேசி எழுதிய புத்தகங்களுள் ஒன்று, ஈட் தட் ஃப்ராக். இந்த புத்தகத்தில், ஒரு விஷயத்தை தள்ளி போடுவதால் ஏற்படும் விளைவுகளையும், அதனால் என்னென்ன வெற்றிகள் தள்ளிப்போகும் என்பதையும் விளக்கி இருக்கின்றனர்.

Deep Work: Rules for Focused Success in a Distracted World

கால் நியூபோர்ட் எழுதிய புத்தகம் இது. உலகில், அனைவரும் ஏதோ ஒரு விஷயத்தை நோக்கி ஓடிக்கொண்டு கவனத்தை அதில் செலுத்திக்கொண்டு இருக்கும் போது, நாம் எப்படி ஒரு விஷயத்தில் முன்னேற முடியும் என்று விளக்குகிறது, இப்புத்தகம். 

Atomic Habits:

வாழ்வில் நல்ல பழக்கங்களை அதிகரித்து, தீய பழக்கங்களை கத்தரிப்பதன் மூலம் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இதனை ஜேம்ஸ் க்ளியர் எழுதி இருக்கிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link