ஒருநாள் போட்டிகளில் இவ்வளவு பேர் இரட்டை சதங்கள் அடித்து உள்ளார்களா?
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் ரோகித் சர்மா 264 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 2014ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவிற்கு எதிராக இந்த சாதனை படைத்தார். இது இவரது இரண்டாவது இரட்டை சதம் ஆகும்.
237 ரன்களுடன் நியூசிலாந்தை சேர்ந்த மார்டின் குப்டில் இரண்டாம் இடத்தில் உள்ளார். 2015ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ரன்களை குவித்தார்.
2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக வீரேந்திர சேவாக் 219 ரன்கள் குவித்தார்.
2015ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் 215 ரன்கள் விளாசினார்.
2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஜமான் ஜிம்பாவே அணிக்கு எதிராக 210 ரன்கள் அடித்தார்.
2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 209 ரன்கள் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார் ரோகித் சர்மா.
2017 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அணிக்கு எதிராக 208 ரன்கள் அடித்து தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார் ரோஹித் ஷர்மா.
2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் முதல் இரட்டை சதத்தை அடித்தார் சச்சின் டெண்டுல்கர்.