பெண் பிள்ளைகளுக்கு அப்பாவை அதிகமாக பிடிப்பது ஏன்? காரணம் இதுதான்!
பெண் பிள்ளைகளுக்கு, அப்பாக்கள் பாதுகாப்பான உணர்வை அளிப்பர். இது, பிறரிடம் இருந்து மகள்களுக்கு வித்தியாசமாக இருக்கும். இதனால், தங்களின் அப்பாக்களை மகள்களுக்கு மிகவும் பிடிக்கும்.
தந்தைக்கும் மகளுக்கும் ஒரே மாதிரியான பழக்கங்கள், பிடித்த விஷயங்கள் இருக்கும் போது இருவருக்குள்ளும் இருக்கும் உணர்ச்சி நெருக்கம் அதிகமாகும். இதனால் பெண் பிள்ளைகள் தங்களின் அப்பாக்களுடன் அதிக நேரம் இருக்க விரும்புவர்.
பெரும்பாலான அப்பாக்கள், தங்கள் குழந்தைகளை எந்த ஒரு ஆபத்தில் இருந்தும் பாதுகாக்க வேண்டும் என்றே நினைப்பர். இது பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக உணர செய்யும்.
ஆண்கள் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு பெருமாலான அப்பாக்கள் முன் உதாரணமாக இருக்கின்றனர். இது, மகள்களுக்கு அதற்கு ஏற்ப வயது வரும் போது, எப்படிப்பட்ட துணையை தேட வேண்டும் என்பது குறித்த தரநிலையை கொடுக்கிறது.
மகிழ்ச்சியான நினைவுகளையும் வலுவான பிணைப்பையும் உருவாக்கும் விளையாட்டுத்தனம் அப்பாக்கள் இடத்தில் மட்டுமே இருக்கும். இதனால், பெண் பிள்ளைகளுக்கு அப்பாக்களை மிகவும் பிடிக்கும்.
தந்தைகள் பலர் தங்கள் மகள்களை சாகசமாக இருக்கவும் சுதந்திரமாக இருக்கவும் ஊக்குவிக்கிறார்கள். இது பெண் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை வளர்க்கிறது.
அப்பாக்கள், எந்த விஷயமாக இருந்தாலும் தன் மகள்களுக்கு நேரடியான/நேர்மையான பதில்களை கொடுக்கின்றனர். இது, மகள்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கிறது.
அம்மாக்கள் பல சமயங்களில் பெண் பிள்ளைகளை ‘இது செய்யக்கூடாது..அது செய்யக்கூடாது..” என்று கூறி கண்டிப்பர். ஆனால் அப்பாக்கள் அப்படி இருக்க மாட்டார்கள்.